முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஜான்வி கபூர் நடிக்கிறாரா?

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னாவின் நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் பையா.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:29 AM
பகிர்:


லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னாவின் நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் பையா. கார்த்தி, தமன்னாவின் காதல் கெமிஸ்ட்ரி, யுவனின் இசை, நா. முத்துக்குமாரின் காதல் வரிகள்,  லிங்குசாமியின் நேர்த்தியான திரைக்கதை என அனைத்தும் ஒருசேர அமைந்த இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றதுடன்,  ரசிகர்கள் மனதில் தனி இடத்தைப் பெற்றது. 

"பையா' படம் வெளியாகி 12 வருடங்களான நிலையில், இதன் இரண்டாம் பாகத்தினை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இது குறித்த திரைக்கதை அமைப்பில் மும்முரம் செலுத்தி வருகிறார் லிங்குசாமி.  இதில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இதில் ஆர்யாவின் ஜோடியாக நடிப்பது யார் என்ற பேச்சு இணையங்களில் உலவுகிறது. சிலர் தமன்னாவே நடிக்க வேண்டும் என்று விருப்பத்தை சொல்லி வருகின்றனர். சிலர் கார்த்தி - தமன்னா கூட்டணியே இதிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.  

நெட்டிசன்கள் பலர் கதாநாயகியாக பாலிவுட் நடிகையும், ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் நடிக்கிறார் என்று செய்தி பரப்பினர். இந்தத் தகவல் சமுக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து ஜான்வி கபூரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஜான்வி கபூர் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →