ஞாயிறு கொண்டாட்டம்

கர்நாடக சேலையும் கரூர் ஆடையும் ..!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டபோது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த சேலை அனைவரையும் கவர்ந்தது.  

ஆர்.ராமலெட்சுமி

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டபோது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த சேலை அனைவரையும் கவர்ந்தது.  இந்தச் சேலையே "இல்கல்' பட்டால் ஆனது. கர்நாடகத்தின் தர்வாத் மாவட்டத்தில் நெய்யப்பட்டது.

புவியியல் குறியீடு பெற்ற "காசுதி' எனும் நெசவு கலையைப் பின்பற்றி கையால் நெய்யப்பட்டதாகும்.  இந்த சேலையின் எடை சுமார் 800 கிராம். 

இந்தச் சேலைகளில் பொதுவாக, தேர், கோயில் கோபுரம், யானை, மான், மயில், தாமரை போன்றவற்றை உள்ளடக்கிய வடிவமைப்புகளால் நிறைந்திருக்கும். நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த சேலையில் தேர், மயில், தாமரை ஆகியன இடம்பெற்றிருந்தன.

இதேபோன்று, குடியரசுத் தலைவர் பதிலுரையின்போது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த நீலநிற ஆடை பிளாஸ்டிக் கழிவுகளால் மறுசுழற்சி முறையில் செய்யப்பட்டது. புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற எரிசக்தி வார விழாவின்போது,  அவருக்குப் பரிசாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் அலுவலர்கள் வழங்கினர். இந்த ஆடையை ஐஓசி பணியாளர்களுக்குச் சீருடையாகப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெட் பாட்டில்கள் சுமார் 28 பாட்டில்களை மறுசுழற்சி செய்ய இந்த ஆடை பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் இந்த கரூரில் தயாரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

சிறுபான்மையினருக்கு திமுக தான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி

தமிழ்நாடு ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

இசைக்கு மொழி தடையில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT