ஞாயிறு கொண்டாட்டம்

நட்பின் வழியே கதை

ராயல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கும்பாரி'.  

தினமணி

ராயல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கும்பாரி'.  விஜய் விஷ்வா, நலீப் ஜியா, சஞ்சீவி,  ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடிக்கிறனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஜோசப்.   படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""காந்தியும் ஹிட்லரும் ஒரே வீட்டில் இருந்தால் எப்படியிருக்கும். அப்படி எழுகிற ஒரு சூழலை கடக்கிற சில மனிதர்களின் கதைதான் இது. சந்தோஷத்தை எதிர் கொள்கிற அதே நேரத்தில், உண்மையைப் பார்த்தால் மனுஷக்கு அவ்வளவு பயம்.

இதுதான் வாழ்வின் பெரும் சவால். சந்தோஷத்தை அடைவதற்காக ஒரு பொய் சொல்கிறோம். அது அந்த நேரத்தில் அழகாக இருக்கும். கீரிடமாக ஜொலிக்கும். ஆனால், உண்மை அம்மணமாக  நிற்கும். ஒரு கட்டத்தில் ஏசுநாதர் தலையில் இருந்த முள் கீரிடம் மாதிரி குத்தும். அதனால்தான் உண்மையை கண்டு ஓடி ஒளி
கிறோம். சந்தோஷம் மட்டுமே கண்ணுக்கு தெரிய, பொய் துரத்த... உண்மை நெருக்க...  பலர் சாமியாராக திரிகிறார்கள். சிலர் பைத்தியமாகிறார்கள். என்னை கேட்டால் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை.  அது வலிக்கும். உசுரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படி ஒரு அனுபவம் இங்கே சிலருக்கு கைக் கூடி வருகிறது. அதை நட்பின் வழியே கடத்தியிருக்கிறேன் என்றார் இயக்குநர். 

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் முதல் பாடலான கும்பாரி பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குமாரதாஸ் தயாரிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT