கொடைக்கானலில் நடக்கும் கதை
குட் நியூஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கல்லறை'.
குட் நியூஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'கல்லறை'.
சகோ. ரமேஷ், தீப்தி திவான், ரதி ஜவஹர், ஜவஹர் ஞானராஜ், பிரேம பிரியா, ரோஷிலா பாரதிமோகன், சுரேந்தர் ஹரிஹரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.பி.ஆர். கொடைக்கானலில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ''சாராயம்தான் போதை என்று பல பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அது தவறு... கடவுள் மனிதனின் ரத்தத்திலேயே கொஞ்சம் சாராயத்தைக் கலந்துவிட்டு இருக்கான். பணம், காதல், புகழ், படைப்பு, அதிகாரம், ஆன்மிகம் என ஒவ்வொன்றும் போதைதான். போதையை மாற்றிப் போட்டால், பாதையே மாறிப்போகும். உன் போதை சாராயத்துல இல்லை... நல்ல விஷயத்துல போடு. இதுதான் இந்தப் படத்தின் லைன். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு விஷயத்திற்கு அடிமையாக இருப்பார்கள்.
Advertisement
Advertisement
அப்படி போதைக்கு அடிமையான கதாபாத்திரத்தின் வாழ்க்கை தான் இந்த படத்தின் திரைக்கதை. மனிதன் அவன் நினைப்பதை காட்டிலும் அதிக ஒழுக்கமுடையவன்.,
ஆனால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு ஒழுக்கங் கெட்டவன்' என்ற ' சிக்மண்ட் ப்ராய்ட்'ன் வாசகம் தான் படம்'' என்றார் இயக்குநர்.