முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அரசியல் கதையில் கவுண்டமணி

மீண்டும் களம் காணுகிறார் கவுண்டமணி. சிறிய இடைவெளிக்குப் பின் அவர் நடித்து வரும் படத்துக்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:


மீண்டும் களம் காணுகிறார் கவுண்டமணி. சிறிய இடைவெளிக்குப் பின் அவர் நடித்து வரும் படத்துக்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை பல நகைச்சுவை பட்டாளம் கவுண்டமணியுடன் கை கோர்க்கவுள்ளது. மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர். 

கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். கதை எழுதி இயக்குகிறார் சாய் ராஜகோபால்  'சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோருடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன். 

இந்தக் கதைக்காக  கவுண்டமணியை சந்தித்த போது அவர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும்'' என்றார்.  சித்தார்த் விபின் இசையமைக்க, ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவை கையாள்கிறார். கலை இயக்கத்திற்கு மகேஷ் நம்பியும், படத்தொகுப்புக்கு ராஜா சேதுபதியும் பொறுப்பேற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →