இரட்டை இயக்குநர்கள் இயக்கும் லாக்கர்
இரட்டை இயக்குநர்களான ராஜசேகர் - யுவராஜ் கண்ணன் எழுதி இயக்கி வரும் படம் 'லாக்கர்'. விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன், சுப்ரமணியன் மாதவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இரட்டை இயக்குநர்களான ராஜசேகர் - யுவராஜ் கண்ணன் எழுதி இயக்கி வரும் படம் 'லாக்கர்'. விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன், சுப்ரமணியன் மாதவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்காக பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை படமாக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஹாலிவுட் சினிமாக்கள் அதிகமாக பயணப்படும் ஹிஸ்ட் ஜானர் பாணியில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிப்பதற்கான திட்டங்கள் நிறைய இருக்கும்.
அது மாதிரியான கதை. பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவன். எதற்காக அவனுக்கு இவ்வளவு வெறி, வேட்கை... இதைச் சொல்வதுதான் படம். பணம், மக்கள் மத்தியில் ஒரு நெருக்கடியை உருவாக்கி வைத்திருக்கிறது. அன்பாக வாழ்வதை விட இங்கே பணக்காரனாக வாழத்தான் எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். எல்லாருக்குமே நாளைக்குக் காலையில் பணக்காரன் ஆகி விட வேண்டும் என்று ஆசை.
Advertisement
அந்த ஆசையைத்தான் ஃபோர்ஜரி ஆள்கள் சுலபமாக அறுவடை செய்து விடுகிறார்கள். மாதத்துக்கு ஒன்று, ஏரியாவுக்கு ஒன்று என நடந்த மோசடி வேலைகளை பேப்பரில் படித்து, அது தொடர்பான ஆள்களைச் சந்தித்து எழுதப்பட்ட கதை இது. சென்னை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.