ஞாயிறு கொண்டாட்டம்

இரவே இல்லாத நாடுகள்..!

ஐரோப்பாவின் வடக்குப் பகுதியான நார்வேயில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு சூரியன் மறைவதே இல்லை.

ஆர். மகாதேவன்


நார்வே:

ஐரோப்பாவின் வடக்குப் பகுதியான நார்வேயில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு சூரியன் மறைவதே இல்லை. ஏனெனில் இது ஆர்டிக் பகுதிக்கு மிக அருகில் உள்ளது. இதனால், பூமி சுழன்றாலும் கூட இதன் அச்சில் எந்த மாற்றமும் இருக்காது.

கனடா:

கனடாவின் வடமேற்கில் ஆர்டிக் வட்டத்துக்கு மேலே இரு டிகிரிக்கு தொலைவில் நுளைவுட் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடம் இரண்டு மாதங்களுக்கு மேலாக சூரிய ஒளியைக் காண்கிறது. இங்கு சூரியன் அஸ்தமனம் ஆகாமல், அப்படியே பகல் பொழுதாகவே நீடிக்கிறது.

ஐஸ்லாந்து:

ஐஸ்லாந்தில் ஜூன் மாதம் முழுவதும் "மிட்நைட் சன்' என்று அழைக்கப்படும் நள்ளிரவு சூரியனை இங்கு காண முடிகிறது.

அலாஸ்கா:

அலாஸ்காவில் உள்ள பாரோ என்ற இடத்தில் மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜூலை மாதத்தின் இறுதி வரை இங்கு சூரியன் மறைவதே இல்லை.

பின்லாந்து:

கோடைகாலத்தில் தொடர்ச்சியாக , 73 நாள்களுக்கு சூரியன் அஸ்தமிப்பது இல்லை.

ஸ்வீடன்:

மே தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை சூரியன் நள்ளிரவில்தான் மறையும். அதே சமயத்தில் மறைந்த சிறிது நேரத்தில் அதிகாலை 4 மணிக்கு நாட்டில் சூரியன் உதயமாகிவிடும். ஸ்வீடனில் தொடர்ச்சியாக, சூரிய ஒளிக்காலம் ஆண்டில் ஆறு மாதங்கள் நீடிக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

SCROLL FOR NEXT