தோனியின் தயாரிப்பில்...
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகி வரும்
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் 'எல். ஜி. எம்.' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
"இந்தப் படம் கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் முதல் தயாரிப்பாகும். எம். எஸ். தோனி மற்றும் சாக்ஷி தோனியின் தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 'எல். ஜி. எம்.' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
இதற்காக படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்ட பிரத்யேக நிகழ்வும் நடைபெற்றது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களும் தங்களின் மகிழ்ச்சியை கொண்டாட்ட மனநிலையில் பகிர்ந்து கொண்டனர்.
படத்தின் பணிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் நாள் வரை முழு செயல்முறையும் விரிவான முறையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர், ஆடியோ வெளியீடு, வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.