ஞாயிறு கொண்டாட்டம்

சிவாஜி ருசிகரம்..

சிவாஜி கணேசன் ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம்;  ரத்த பாசம்' என்ற படத்தை இயக்கியவர், பாதி படத்துக்கு மேல் இயக்க முடியாததால், மீதிப் படத்தை சிவாஜியே இயக்கினார்.

எம். அசோக்ராஜா


சிவாஜி கணேசன் ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம்;  ரத்த பாசம்' என்ற படத்தை இயக்கியவர், பாதி படத்துக்கு மேல் இயக்க முடியாததால், மீதிப் படத்தை சிவாஜியே இயக்கினார். படத்தின் பெயர்ப் பட்டியலில் (டைட்டில்) இயக்கம் என்ற பெயர் வர வேண்டிய இடத்தில் எவரது பெயரும் இடம்பெறாமல் சிவாஜி கணேசனின் புகைப்படங்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்படும்.

பண்டரிபாய் முதல் சுமார் 55 கதாநாயகிகள் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளனர். இவர்களில் கே.ஆர்.விஜயா 40 படங்களிலும், பத்மினி 38 படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.

சிவாஜி கணேசனுக்காக இசையமைப்பாளர் கண்டசாலா, "கள்வனின் காதலி' என்ற படத்தில் "வெய்யிற்கேற்ற நிழலுண்டு' என்ற ஒரேயொரு பாடலைப் பாடியுள்ளார்.

சிவாஜிக்கு பாடியவர்களில் டி.ஏ.மோதியும் ஒருவர். "சபாஷ் மீனா' படத்தில் "காணா இன்பம் கனிந்ததேனோ' என்று பாடல். மழையில் நனைந்தபடி, சிவாஜியும் மாலினியும் பாடுவார்கள். மறக்க முடியாத குரல்.

பாரதியார் பாடல்கள் மட்டும் பயன்படுத்தப்பட்ட ஒரே சிவாஜி படம் "கப்பலோட்டிய தமிழன்'.

சிவாஜி நடித்த படங்களில் அவருக்கு பாடல்கள் இருந்தும், அவர் பாடாமல் இருந்த படங்கள்: "மோட்டார் சுந்தரம் பிள்ளை', "தில்லானா மோகனாம்பாள்'.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

SCROLL FOR NEXT