முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தமிழகத்தின் எல்லோரா!

தமிழகத்தின் எல்லோரா'  என்று அழைக்கப்படும்  கழுகுமலை வெட்டுவான் கோயில் தலைகீழாகக் கட்டப்பட்ட கோயிலாகும்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
பகிர்:

"தமிழகத்தின் எல்லோரா'  என்று அழைக்கப்படும்  கழுகுமலை வெட்டுவான் கோயில் தலைகீழாகக் கட்டப்பட்ட கோயிலாகும்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட கழுகுமலை எனும் இடத்தில் இந்தக் கோயில்  அமைந்துள்ளது. கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ.  தொலைவில் அமைந்துள்ள கழுகுமலையில் ஊரிலிருந்து 1 கி.மீ.  தொலைவில் இருக்கும் மலை மீது குடைவரை கோயில் கால பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.

1,200 ஆண்டுகள் பழமையான இந்தக் குடைவரை கோயில் திராவிடக் கட்டட கோயில் வடிவமைப்பைப் பயன்படுத்தி,  சுமார் கி.பி. 800இல் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.

கருவறையில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளது.  ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட மிருதங்க தட்சிணாமூர்த்தி இங்கு  அமைக்கப்பட்டுள்ளது. 

கோயிலே ஒரு பகுதி நிறைவடையாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கோயில் அரைகுறையாக நிறுத்தப்பட்டதற்கு பல யூகங்கள் கூறப்படுகின்றன. கோயில் வேலை நடந்து கொண்டிருந்த நிலையில், பாறையில் வெடிப்பு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டிருக்கலாம் அல்லது போரில் மன்னன் இறந்ததால் அப்படியே விடப்பட்டிருக்கலாம் என கருத்து நிலவுகிறது.

இந்தக் கோயில் ஒரு டூம் அல்லது தாமரைப் பூ தொங்குவது போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கரடுமுரடான கழுகு மலை மீது ஏறி சற்று ட்டிப் பார்த்தால் மிகவும் கலைநயமிக்க வெட்டுவான் கோயில் தென்படுகிறது.

ஒரே கல்லினால் ஆன கோயில் என்பதுதான் சிறப்பு.  ஒரு பெரிய மலையை "ப' வடிவில் செதுக்கி,  அதில் 7.50 மீட்டருக்கு சதுரமாக வெட்டி, கோயிலை மேலிருந்து கீழாக வெட்டி அற்புதமாக உருவாக்கியுள்ளனர். 

சமணர் படுக்கை

மலையின் மற்றொரு பகுதியில் சமணர்கள் சித்தாந்தம் போதித்த பல்கலைக்கு அடையாளமாக பல பாறைகளின் செதுக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் சிற்பங்களே சாட்சியாக அமைந்துள்ளன.இந்த சமணக் கல் படுக்கைகள் குடைவரை கட்டட அமைப்பு பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (கி.பி.  768800) உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →