ஞாயிறு கொண்டாட்டம்

மூலிகை சானிடரி நாப்கின்: விழிப்புணர்வும் பயிற்சியும்..!

மூலிகை சானிடரி நாப்கின் குறித்த விழிப்புணர்வை பெண்களை ஏற்படுத்துவதுடன் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சியையும் தொழில்முனைவர்களாகவும் மாற்றி வருகிறார் திருச்சி சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த ஃபஹீமா.

DIN

மூலிகை சானிடரி நாப்கின் குறித்த விழிப்புணர்வை பெண்களை ஏற்படுத்துவதுடன் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சியையும் தொழில்முனைவர்களாகவும் மாற்றி வருகிறார் திருச்சி சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த ஃபஹீமா.

இதுகுறித்து அவரிடம் பேசியபோது:

'பயன்படுத்துவதற்கு எளிதான சானிடரி நாப்கின்கள் பெண்களுக்கு பல ஆரோக்கியச் சிக்கல்களைத் தருகின்றன. ரசாயனப் பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும் இந்த நாப்கின்களால் பலவகை ஒவ்வாமை, தோல் வியாதிகள், கர்ப்பப் பையில் கட்டி, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமாகின்றன. குழந்தையின்மைக்கும் காரணமாக அமைகிறது.

மூலிகை நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்வதில் நான் ஈடுபடக் காரணம் உடல் நலம் காக்கும் இயற்கைப் பொருள்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுதான். அந்த நிகழ்வுகளில் இடம் பெறும் இயற்கைப் பொருள்கள் அங்காடிகளில், மூலிகை நாப்கின்கள் கண்ணில் படும். அதை வாங்கி உபயோகித்துப் பார்த்தேன். கடைகளில் விற்கக் கூடிய வியாபார நாப்கின் பயன்பாட்டுக்கும் மூலிகை நாப்கினை பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது. அதிலிருந்து கடைகளில் விற்கும் நாப்கின் வாங்குவதை நிறுத்திவிட்டேன்.

"நானே ஏன் தயாரிக்கக் கூடாது' என்று சிந்தித்து, முசிறியைச் சேர்ந்த வள்ளியம்மாவிடம் முறைப்படி பயிற்சி பெற்று, மூலிகை நாப்கின்கள் தயாரிப்பைத் தொடங்கினேன்.

ரசாயனக் கலவைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நாப்கின்களால் ஏற்படும் தீமைகள், ஆரோக்கியக் கேடுகள் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு உருவாக்கி அவர்களாகவே மூலிகை நாப்கின்களை தயாரித்து பயன்படுத்தச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.

வியாபார நாப்கின்கள் பெண்களுக்கு மட்டுமல்லாமல் சுற்றுபுறச்சூழலுக்கும் கேடு விளைவிக்க கூடியதாக இருக்கிறது. இதற்கு மாற்று மூலிகை நாப்கின்தான் என்பதை நான் மட்டும் உணர்ந்தால் போதாது. மற்ற பெண்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

கற்றாழைப் பொடி, துளசிப் பொடி, வேப்பிலைப் பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி என நான்கு வகையான மூலிகை பொடிகளைச் சேர்த்து மூலிகை நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன.

இவை ஒவ்வொன்றுக்கும் ஒருவகை மருத்துவக் குணம் இருப்பதால் மாதவிடாய் காலத்தில் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது. இதனால் பெண்களுடைய கர்ப்பப் பை பாதுகாக்கப்படுகிறது.

மூலிகை நாப்கினின் விலை வியாபார நாப்கினைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என்கிற விமர்சனம் இருப்பது உண்மைதான். ஈரத்தை உறிஞ்சும் தரமான பருத்தியை மூலிகை நாப்கினில் பயன்படுத்துவதால் இந்த விலையைத் தவிர்க்க முடியவில்லை. உடல்நலம் என்ற கோணத்தில் பார்த்தால் அதிக விலை பெரிதாகத் தெரியாது. மூலிகை நாப்கின் பயன்பாடு அதிகமானால் விலை தானே குறைந்துவிடும்.

வியாபார நாப்கின்கள் மக்காதத் தன்மை கொண்டது. அதிலுள்ள பாலி நெகிழிகள் மண்ணின் உயிர்ச்சத்துகளை விஷமாக மாற்றக்கூடியவை. மூலிகை நாப்கின்கள் சாதாரண பருத்தித் துணியை போல எளிதில் மக்கிவிடக் கூடியவை.

தமிழகத்தின் பல இடங்களில் பெண்களுக்கு மூலிகை நாப்கின் தயாரிப்பில் பயிற்சி கொடுத்து தொழில் முனைவராகவும் மாற்றியுள்ளேன். எனது தயாரிப்பை "நறுமுகை' என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறோம். ஐந்து நாப்கின்களை சிறிய துணிப் பையில் வைத்து விற்பனைக்கு அனுப்புகிறோம். பிளாஸ்டிக் பயன்பாடு எங்கள் தயாரிப்பில் அறவே இல்லை'' என்கிறார் ஃபஹீமா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

SCROLL FOR NEXT