கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட உடுப்பி அருகேயுள்ள "கவுப்' என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஹோசா மாரிகுடி கோயிலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் லேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார் சூர்யகுமார் வந்திருந்தார். விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள இந்தக் கோயிலுக்கு தங்கம், பணத்தை நன்கொடையாக அளித்தார் சூர்யகுமார்.
அவர் வந்து சென்றவுடன் அந்தக் கோயிலில் மேலும் பிரபலமானது.
மாரிகுடி என்பது "மாரியம்மன் இருப்பிடம்' என்று பொருள். 1741-ஆம் ஆண்டில் கேளடி வம்சம் ஆட்சிக்கு வந்தபோது, மாரியம்மன் வழிபாடு வந்தது. பல இடங்களில் கோயில்கள் எழுந்தன. இந்த வம்சத்தை ஹைதர் அலி தோற்கடித்து, ஆட்சியைப் பிடித்ததும் மாரியம்மன் வழிபாடும் குறைந்தது.
இருப்பினும், கவுப் என்ற இடத்தில் ஒரு கோட்டை இருந்தது. அங்கு ராணுவப் படைகள் தங்கியிருந்தன. ஒருசமயம் அங்கு, ஹைதர் அலி ஆட்சி முடிவுக்கு வந்தாலும், அந்தப் பகுதிக்கு உக்ராணி என்ற முஸ்லிம் தலைவராகத் தொடர்ந்தார்.
இந்தச் சூழலில் ஒருநாள் கோட்டையில் இருந்த தண்ணீர் தொட்டியில் யாரோ குளிக்கும் சத்தம் வந்தது. அது உக்ராணி காதில் விழ, அருகே சென்றார். மல்லிகைப் பூ நறுமணமும் வீசியது.
""யார் அங்கே'' என்று குரல் கொடுத்தார்.
""நான் மாரி.. எனக்கு ஒரு குடில் வேண்டும். அங்கு நான் இருப்பேன்'' என்று அசரரியாகக் குரல் வந்தது.
""நான் முஸ்லிம்''
""இருந்தாலும் நீதான் எனக்கு கோயில் கட்ட வேண்டும். உள்ளூர் மக்கள் உதவியுடன் நீ கட்டுகிறாய்..'' எனக் கூறி அசரரி நின்றுவிட்டது.
திகைத்த உக்ராணி தனது ஊர் மக்களைக் கூட்டி, அவர்களின் துணையோடு கோயிலைக் கட்டி முடித்தார்.
முதலில் கோயிலில் சிலை இல்லை. ஒரு சிம்மாசனம்தான் வைக்கப்பட்டது. அதற்குதான் பூஜை. பின்னர் சிம்மாசனத்தில் கலசம் வைத்து பூஜிக்கப்பட்டது. அடுத்து சிலை வந்தது. தற்போது கோயில் வழிபாடு நடக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.