லாரி ஓட்டுநர் Picasa
ஞாயிறு கொண்டாட்டம்

நட்சத்திர 'லாரி ஓட்டுநர்'!

யூடியூப் வாயிலாக, சமையல் காணொளிகளை லாரி ஓட்டுநர் ராஜேஷ் ரவாணி வெளியிட்டு, மாதம்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கிறார்.

சுதந்திரன்

யூடியூப் வாயிலாக, சமையல் காணொளிகளை லாரி ஓட்டுநர் ராஜேஷ் ரவாணி வெளியிட்டு, மாதம்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கிறார். இருபது ஆண்டுகளாக இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் லாரியை ஓட்டிப் பயணிக்கும் அவருக்கு, நட்சத்திர அந்தஸ்தும் பெரிய ரசிகர்கள் பட்டாளமும் கிடைத்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்தாராவைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:

'எனது அப்பா லாரி ஓட்டுநர். அவர் மாதம் ஐநூறு ரூபாய் தருவார். ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்குப் போதாது. அக்கம்பக்கத்தில் கடன் வாங்குவோம். வறுமை எங்களை விடாமல் தொடர்ந்தது. இளமையிலேயே நான் லாரி ஓட்டுநரானேன்.

எனக்கு அருமையாக சமைக்க வரும். சமையல் திறமைகளை ஆன்லைனில் காணொளி மூலம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினேன். தொடக்கத்தில் எனது முகத்தைக் காட்டாமல் செய்முறையை விளக்குவேன். சமையல் பாத்திரங்கள், சமையல் பொருள்களோடு கைகள் மட்டும்தான் காணொளியில் தெரியும்படி படம் பிடித்து வெளியிட்டேன்.

சுவையான வர்ணனையைக் கேட்ட ரசிகர்கள் நான் காணொளியில் தோன்றுமாறு வற்புறுத்தத் தொடங்கினர். எனது மகனைப் படம் பிடிக்கச் சொல்லி "யூடியூப்'பில் பதிவேற்றினேன். அந்தக் காணொளியை ஒரே நாளில் நான்கரை லட்சம் பேர் பார்த்தனர்.

திருப்பம் ஏற்பட்டது. பொழுதுபோக்காக ஆரம்பித்தது இந்த அளவுக்குப் பிரபலமாகும் என்பதையும் தாண்டி, லாபகரமான வருமானத்தையும் தந்தது. இதை கனவிலும் நினைத்ததில்லை.

பிரபலமானதுடன் வருமானமும் கிடைக்க ஆரம்பித்தது. மாதம்தோறும் ஆயிரங்களில் தொடங்கி சிறிது சிறிதாகப் பெருகி, பத்து லட்சம் ரூபாய் வரை கிடைக்கத் தொடங்கியது. மாதம் சராசரி நான்கு லட்சம் ரூபாய் கிடைக்கிறது. எனக்கு 19 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். "ராஜேஷ் விலாக்ஸ்' பெயரில் தனி சானல் இருக்கிறது.

2021-இல் காணொளிகளைப் பதிவேற்றம் செய்யத் தொடக்கி, 912 காணொளிகளை பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

லாரி ஓட்டுநர் கற்பனை செய்து பார்க்க முடியாத வருமானத்தை எனது "யூடியூப்' காணொளிகள் வழங்கின. கிடைத்த பணத்தில் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். நல்ல வருமானம் வருகிறதே என்பதற்காக, லாரி ஓட்டுவதை நிறுத்தவில்லை.

லாரி ஓட்டும் நாள்களில் நாடோடியாகத்தான் வாழ முடியும். ஓய்வெடுக்க லாரியை நிறுத்தும் நேரத்தில் சமைப்பேன். நான் சமையல் செய்வதை எனது உதவியாளரைப் படம் பிடிக்கச் சொல்வேன். காணொளியில் வழியோரக் காட்சிகளையும் பதிவு செய்யச் சொல்வேன். சமையலில் மீதான காதல், என்னை இணைய ஆளுமைகளில் ஒருவனாக மாற்றியுள்ளது. சமையல் காணொளிகள் வறுமையை ஓட ஓட விரட்டியேவிட்டது'' என்கிறார் ராஜேஷ் ரவாணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லயோலா கல்லூரி, சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி!

நன்றி என்பது உள்ளொளி... சீரத் கபூர்!

அழகு புகைப்படங்களில் மட்டும் அல்ல... ஆஷ்னா ஜவேரி!

நான் ஜாக்குலின்... !

சாம்பல் வண்ணப் பூவே... நேகா ஜேத்வானி!

SCROLL FOR NEXT