ஃபேமிலி படம் 
ஞாயிறு கொண்டாட்டம்

ஃபேமிலி படம்

யு.கே. கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'ஃபேமிலி படம்'. டைனோசார் பட புகழ் உதய் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.

DIN

யு.கே. கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'ஃபேமிலி படம்'. டைனோசார் பட புகழ் உதய் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுபிக்ஷô கயா நடிக்கிறார். விவேக் பிரசன்னா, ஸ்ரீஜா ரவி, பட்டிமன்ற பிரபலம் மோகனசுந்தரம், பார்த்திபன் குமார் மற்றும் கவின் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் செல்வகுமார் திருமாறன். திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் செல்வகுமார் திருமாறன், ''மூன்று சகோதரர்களை கொண்ட ஒரு குடும்பத்தை கதை சுற்றி சுழல்கிறது. இந்த மூவரில் இளைய சகோதரர் தனது லட்சியத்தை நிறைவேற்ற முயல்கிறார். ஒட்டுமொத்த குடும்பமே இதற்கு ஆதரவாக நிற்கிறது.

அவரால் தனது கனவை நனவாக்க முடிந்ததா, இதனால் குடும்பத்தில் எந்த சிக்கலாவது நேர்ந்ததா என்பதை கதை விவரிக்கும் கதை இது. இந்தப்படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை. ஆனால் கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளும் சந்தர்ப்பங்களுமே எதிர்மறையாக நிற்க, அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை 'ஃபேமிலி படம்' சுவாரசியமாக சொல்லும்.

சென்னையில் 80 சதவீத படப்பிடிப்பும், மதுரையில் 20 சதவீத படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது'' என்றார் இயக்குநர். 'கேடி கருப்புதுரை', 'சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அனிவி பாடல்களுக்கு இசையமைக்க, 'விலங்கு' இணையத்தொடரில் தனது இசையின் மூலம் மிரட்டிய அஜிஷ் இப்படத்தின் பின்னணி இசையை அமைத்துள்ளார். ஆர் சுதர்ஷன் படத்தொகுப்பையும், நந்து கலை இயக்கத்தையும் கையாண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT