ஏ.டி.எம். கார்டின் முன்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள 16 இலக்க எண்ணுக்கான அர்த்தம் தெரியுமா?
கார்டு மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு, அந்த எண்கள் தேவைப்படும். அவை உங்கள் வங்கிக் கணக்குடன் நேரடி இணைப்பைக் கொண்டுள்ளன.
முதல் இலக்கத்தின் இணைப்பு அதை வழங்கும் தொழில்துறையுடன் உள்ளது. இது முக்கியமான தொழில் அடையாளம் காட்டியாகும். இந்த எண்கள் ஒவ்வொரு தொழில் துறைக்கும் வேறுபட்டவை.
அடுத்த ஐந்து எண்கள் அந்த வங்கியின் அடையாள எண். அதாவது, எந்த நிறுவனம் கார்டை வழங்கியது என்பதைத் தெரிவிக்கிறது. இதற்குப் பிறகு, ஏழாவது எண்ணிலிருந்து பதினைந்தாவது எண் வரை எழுதப்பட்ட எண்கள் உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக இணைக்கப்பட்டதாகும். இருப்பினும், இவை உங்கள் கணக்கு எண்கள் அல்ல; ஆனால் கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
அதே சமயம், கார்டில் பதிந்துள்ள பதினாறாவது எண்ணானது கார்டின் செல்லுபடியாகும் தன்மையைத் தெரிவிக்கிறது. இந்த எண் 'செக்சம்' இலக்கம் என்று அழைக்கப்படுகிறது.
எனவே, கார்டில் அச்சிடப்பட்டுள்ள இந்த 16 எண்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன். இவர் கண்டுபிடித்த இயந்திரம் தற்போது பலவகைகளில் மாற்றம் பெற்றுவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.