ஞாயிறு கொண்டாட்டம்

வழக்கின் பின்னணியில் காதல்

காதலின் பின்னணியில் மர்மம்: 'ராஞ்சா' படத்தின் கதைக்களம்

DIN

சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஸ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் உடன் இணைந்து தயாரித்து வரும் படம் "ராஞ்சா'. குறும்படம் இயக்கி கவனத்தை ஈர்த்த சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரஜன் மற்றும் இவானா வருண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அதிரன் சதீஷ், பத்மன் மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசும் போது...

""ஒரு இளம்பெண்ணை மையமாகக் கொண்ட கதையில் அவளை சுற்றி தொடர் மரணங்கள் நடைபெறுகின்றன. எதனால் அவ்வாறு நடக்கிறது, இதன் பின்னணியில் இருப்பது என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் வகையில் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு குறித்து விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக பிரஜன் நடித்துள்ளார்.

காதலின் சக்தி அசாத்தியமானது, அபரிதமானது. ஆக்கும், காக்கும், அழிக்கும் ஆற்றலைக் கொண்டது அது. இத்தனை வல்லமை மிகுந்த காதலை புதுமையான கோணத்தில், அதே சமயம் அதன் இயல்பு மாறாமல் திரையில் காட்ட முயற்சித்துள்ளோம்'' என்றார்.

"காலங்களில் அவள் வசந்தம்' புகழ் ஹரி இசையமைக்க, கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அஷ்வின் படத்தொகுப்பை கையாளுகிறார். படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. செப்டம்பரில் உலகெங்கும் திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

என் அடுத்த பட இயக்குநர் இவர்தான்: அருண் விஜய்

பிரதமர் மோடி வருகை சென்னைக்கு மாற்றம்!

ஜப்பானில் வெளியாகும் புஷ்பா -2! டோக்கியோ சென்றார் அல்லு அர்ஜுன்!

எங்கள் ஆதரவின்றி யாரும் மும்பையின் மேயர் ஆக முடியாது: காங்கிரஸ் எம்பி பேச்சு!

SCROLL FOR NEXT