2026-ல் சோனி பிக்ஸர்ஸ் வெளியிடும் 13 திரைப்படங்கள்!
2026-ல் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிடும் படங்கள் குறித்து...
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் 2026 ஆம் ஆண்டில் அழுத்தமாகத் தன் முத்திரையைப் பதிக்கவுள்ளது.
உலகளாவிய அளவில் தனக்கென்ற ஒரு ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்திழுத்துள்ள ஜுமான்ஜி தொடரின் அடுத்த பாகமும் இவ்வருடம் வெளியாகவுள்ளது.
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் தொடர்ந்து தரமான படங்கள் வழங்குவதை ஒரு கலையாக மாற்றியுள்ளது.
கடந்த ஆண்டில், வணிக வெற்றிக்கும் கலாச்சாரத் தொடர்புக்கும் இடையே ஓர் அரிய சமநிலையை சோனி ஸ்டூடியோ உருவாக்கியிருந்தது. அது சாத்தியமாக, ஒற்றை வழிமுறையென ஒன்றை மட்டும் கடைப்பிடிக்காததே காரணமாகும்.
2025 இல், இரண்டு படங்கள் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தின. ஒன்று டகோட்டா ஜான்சன், கிறிஸ் எவன்ஸ் மற்றும் பெட்ரோ பாஸ்கல் நடித்த மெடிரிலலிஸ்ட் படமும் ’டெமான் ஸ்லேயர்: கிமெட்ஸு நோ யாய்பா - இன்ஃபினிட்டி கேஸில்’ எனும் அனிமி ஒரு பெரும் ஓட்டத்தைக் கண்டது.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தியதோடு மட்டுமல்லாமல், டிக்கெட் முன்பதிவுகளின் வரலாற்றையே மாற்றி எழுதியது.
இந்தியாவில், எப்பொழுதையும் விட அதிக வசூல் செய்த சர்வதேச அனிமேஷன் திரைப்படமாக விளங்கியது. இது, ரசிகர்கள் விரும்பும் சினிமாவை உலகமெங்கும் கோண்டு செல்லும் சோனியின் செயற்திறனுக்கும் புகழுக்கும் ஒரு மைல்கல்லாக விளங்கியது.
உவகையளிக்கும் தரமான உள்ளடக்கம்
பிப்ரவரி 13, 2026 அன்று வெளியாகும் அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோவின் கிரைம் 101 படம், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் மூலம் விநியோகிக்கப்படுகிறது. டான் வின்ஸ்லோவின் புகழ்பெற்ற நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
துல்லியமாகத் திருடும் சாமர்த்தியசாலியான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன், நம்பிக்கையிழந்த ஏமாற்றம் நிரம்பிய காப்பீட்டுத் தரகரான ஹால்லி பெர்ரி, ஒரு சங்கடமான கூட்டு வைத்து ஒரு பிரச்னையை தீர்க்க நினைக்கிறார்.
Spider-Verse and K-Pop: டெமோன் ஹண்டர்ஸ் முதலிய படங்களின் பின்னணியில் உள்ள குழு, அட்டகாசமானதொரு அனிமேஷன் படத்துடன் மீண்டும் களம் காண்கின்றனர்.
விறுவிறுப்பான அனிமேஷன் ஸ்போர்ட் நகைச்சுவை திரைப் படம் பிப்ரவரி 20, 2026 அன்று வெளியாகிறது.
பெரிய கதைக்கருவும், மிகப்பெரிய உலகங்களும்
அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட அறிவியல் த்ரில்லர் படமான புராஜெக்ட் ஹெயில் மாரி, 2026 மார்ச் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் மனிதகுலத்தைக் காப்பாற்றும் பணியில் ஈடுபடுகிறார் ரயான் கோஸ்லிங்.
சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல், ஐமேக்ஸ் மற்றும் பிற பிரீமியம் திரையரங்க வடிவங்களில் இந்தப் படத்தை வெளியிடுகிறது.
ஆண்டி வெயிரின் அதிகம் விற்பனையான சிறந்த நாவல் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு, கிறிஸ்டோபர் மில்லர் இதை இயக்கியுள்ளார்.
தான் யார் என்பதையும், தன் பணி என்ன என்பதையும் மறந்த ரைலன்ட் கிரேஸ் (ரயன் கோஸ்லிங்) என்ற விண்வெளி வீரரை மர்மமான விண்கலம் ஒன்றில் விழித்தெழுக்கிறார்.
மே மாதத்தில், தி ஷீப் டிடெக்டிவ் என்ற படம் வெளியாகிறது. அசலான மர்மத்தை, குற்றங்களைக் கண்டுபிடிக்கும் எதிர்பாராத விசாரணைக் குழு பற்றியது இந்தப் படம், 2026, மே 8 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது.
மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவெர்ஸ் படத்தை ஜூன் மாதம் திரைக்குக் கொண்டு வருகிறது சோனி. மிகவும் பிரபலமான இப்படத்தொடரை, இயக்குநர் டிராவிஸ் நைட் மீண்டும் பெரிய திரைக்குக் கொண்டு வருகிறார். இந்த லைவ் ஆக்ஷன் திரைப்படம், ஜூன் 5, 2026 வெளியாகிறது.
படத்தொடர்கள், அச்சுறுத்துலும் ஆற்றலும்
ஈவில் டெட் பர்ன் எனும் அமானுஷ்யப் படம் ஜூலை 24, 2026 அன்று வெளியாகிறது. ஈவில் டெட் (2013), ஈவில் டெட் ரைஸ் (2023) ஆகிய படங்களைத் தொடர்ந்து, இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தை செபாஸ்டியன் வனிசெக் இயக்குகிறார்.
டெஸ்டின் டேனியல் க்ரெட்டான் இயக்கத்தில் ஜென்டாயாவுடன் டாம் ஹோலண்ட் இணைகிறார்.
இப்படத்தில் நடிக்கும் நட்சத்திர நடிகர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படாததால், இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது.
2022 ஆம் ஆண்டில் வெளியான ஸ்பைடர் மேன்: நோ வே ஓம் திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆஃபீஸ் வரலாற்றில், ரூ.300 கோடிக்கு அருகில் வசூலித்து, இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் வெளியீடுகளில் ஒன்றாக மாறியது.
ஆகஸ்ட் 21, 2026 அன்று இன்சிடியஸ் படமும், செப்டம்பர் 18, 2026 அன்று ஜாக் க்ரெக்கர் இயக்கிய ரெசிடென்ட் ஈவிள் படமும் வெளியாகிறது.
நகரம் முழுவதும் பரவும் தொற்றுநோயால் சிக்கிய ஒரு கூரியரின் கண்களின் மூலம் உயிர்வாழும்-திகில் குழப்பத்தை மீண்டும் கற்பனை செய்கிறது.
மற்றொரு எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வெரிட்டி. இதில் ஆன்னி ஹீத்வே, டெகோடா ஜான்சன்முதலியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 2, 2026 அன்று வெளியாகவிருக்கிறது.
அக்டோபரில், ஆரோன் சோர்கின் இயக்கிய தி சோசியல் ரெகானிங் படம் வெளியாகிறது. முகநூல் பொறியாளரும், ஒரு பத்திரிகையாளரும் தளத்தின் இருண்ட ரகசியங்களை இப்படத்தில் அம்பலப்படுத்துகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து, வில்லியம் ஈபுனெக் இயக்கிய ஆர்சங்கெல் படம் நவம்பர் 2026-ல் வெளியாகிறது.
இந்த ஆண்டின் முடிவில், பிளாக்பஸ்டர் படமான ஜுமாஞ்சி 3 டிசம்பரில் வெளியாகிறது. டிவைன் ஜான்சன் ஜாக் பிளாக் மற்றும் கெவின் ஹார்ட் நடித்திருக்கும் இந்த சாகசப்படம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியாகிறது.