Picasa
ஞாயிறு கொண்டாட்டம்

மலையின் உச்சியில் கப்பல்..

'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.. வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்...'

பிஸ்மி பரிணாமன்

'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.. வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்...' என்று சொல்வதுபோல கடலில் மிதக்க வேண்டிய கப்பல் கூட மலை உச்சிக்குச் செல்லும் காலம் வந்துவிட்டது எனலாம். படத்தில் மலையின் உச்சியில் கப்பல் அமர்ந்திருப்பது போல் தோன்றுவது நிஜ கப்பல் அல்ல. மலையின் உச்சியில் கான்கிரீட்டால் ஆடம்பர கப்பல் வடிவில் கட்டப்பட்டிருக்கும் நட்சத்திர ஹோட்டல்.

தென் கொரியாவின் பிரபலமாகியிருக்கும் சுற்றுலா நகரமான ஜியோங்டாங்ஜின் உள்ள குன்றின் உச்சியில் கப்பல் வடிவ விடுதி உள்ளது. கப்பல் ஹோட்டலின் பெயர் 'சன் க்ரூஸ்' என்பதாகும்.

கன்னியாகுமரி, டார்ஜிலிங்கில் சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்ப்பதைப்போல், ஜியோங்டாங்ஜின்னிலும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பார்க்கலாம்.

மலையின் உச்சியில் கப்பல் வடிவில் நட்சத்திர விடுதியில் இருந்து காபி, டிபன் சாப்பிட்டுக் கொண்டே சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் துல்லியமாகக் கண்டு ரசிக்க முடியும்.

இந்த கப்பல் விடுதியில் நட்சத்திர விடுதியில் இருக்கும் பார், சர்வதேச உணவு வகைகள், பொழுது போக்கு அம்சங்கள், நீச்சல் குளம் போன்ற வசதிகள் அனைத்தும் உள்ளன, கப்பல் விடுதியின் நீளம் 541 அடி. உயரம் 148 அடி,. பயணிகள் தங்க 211 அறைகள் உள்ளன.

கப்பல் விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு கடலில் பயணிப்பது போன்ற உணர்வை வழங்க கப்பல் விடுதி முழுவதும் அலைகளின் ஓசையையும், பறவைகள் எழுப்பும்படி விதவிதமான ஒலிகளை ஒலிபரப்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லைன் வா்த்தகம்: பெண்ணிடம் ரூ.20.90 லட்சம் மோசடி

மாநில ஈட்டி எறிதல்: வேலூா் மாணவிக்கு வெள்ளி

வேலூா் புதிய பேருந்து நிலைய அனுமதியை புதுப்பிக்க ஆட்சியா் ஆய்வு

ஜூலை 31-ஆம் தேதி ஆன்லைனில் வரலட்சுமி விரத டிக்கெட் விநியோகம்

வாலிபால் போட்டி: சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி

SCROLL FOR NEXT