மாயா நீலகண்டன் 
ஞாயிறு கொண்டாட்டம்

ராக் இசை தேவதை..

மாயா நீலகண்டனுக்கு பதினொன்று வயதாகிறது. மேற்கத்திய ராக் இசையின் தேவதையாக அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்திருக்கிறார்.

பிஸ்மி பரிணாமன்

மாயா நீலகண்டனுக்கு பதினொன்று வயதாகிறது. மேற்கத்திய ராக் இசையின் தேவதையாக அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்திருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸில் அண்மையில் நடைபெற்ற 'அமெரிக்கா காட் டேலண்ட்' நிகழ்ச்சியில், மாயா கிடார் கருவியை இசைத்து பார்வையாளர்களாகப் பங்கேற்றோரை மெய்சிலிர்க்க வைத்து, ஒரே நாளில் புகழின் உச்சிக்குச் சென்றுவிட்டார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த அவர், செட்டிநாடு ஹரிஸ்ரீ வித்யாலயத்தில் சில ஆண்டுகள் படித்தார். பின்னர், அவர் தனது தாயுடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

தனது சாதனை குறித்து மாயா கூறியதாவது:

''தற்போது அமெரிக்காவின் எஜுகேஷன் வேர்ல்ட் வைட் பள்ளியில் படித்து வருகிறேன், பொதுவாக, ஐம்பது பார்வையாளர்கள் முன்னிலையில்தான் கிடார் வாசித்திருக்கிறேன். பல ஆயிரம் பேர் முன்னிலையில், கிடார் வாசிக்கும் வாய்ப்பு 'அமெரிக்கா காட் டேலண்ட்' நிகழ்ச்சியில்தான் முதன்முதலாகக் கிடைத்தது.

'நான் தமிழ்நாடு- சென்னையைச் சேர்ந்தவள்' என்று மேடையில் அறிமுகப்படுத்திக் கொண்டேன். மேற்கத்திய இசையை, மேற்கத்திய இசைக் கருவியான கிடாரில் இசைக்க வேண்டும். அப்போது மேற்கத்திய உடை அணிவது பொருத்தமாக இருந்திருக்கும். இருந்தாலும், இந்தியாவின் லேஹங்கா உடையைதான் அணிந்திருந்தேன். நெற்றியில் போட்டு, கழுத்தில் நெக்லஸ்..என இந்தியப் பெண்ணாக மேடையில் நின்றேன்.

அரங்கத்தில் பெரும் கூட்டத்தைப் பார்த்து எனக்குப் பதற்றமாக இருந்தது. கிடார் இசைத்து முடித்ததும், அனைவரும் எழுந்து நின்று ஆரவாரத்துடன் கை தட்டியது என்னைப் பரவசப்படுத்தியது.

'நாத பைரவி' ராகத்தில் தொடங்கி பாப்பா ரோச்சின் 'லாஸ்ட் ரிசார்ட்' பாடலில் நிறுத்தினேன். பார்வையாளர்களின் ரசிப்பே எனது பதற்றத்தை நம்பிக்கையாக மாற்றியது.

நடுவர்களான சைமன் கோவல், சோபியா வெர்கரா, ஹெய்டி க்ளம், ஹோவி மண்டேல் உள்ளிட்டோரும் என்னைப் பாராட்டினர். சைமன் கோவல் என்னை 'ராக் இசை தேவதை' என்று புகழ்ந்தார். இந்த நிகழ்ச்சிக்காக பத்து மாதங்களாகப் பயிற்சி செய்தேன்.

ஏழு வயதிலேயே கிடார் இசைக்க ஆரம்பித்துவிட்டேன். இசை மீது ஈர்ப்பு வர எனது தந்தை நீலகண்டன்தான் காரணம். வீட்டில் கர்நாடக இசை எப்போதும் ஒலித்தவாறு இருக்கும். பயணத்தின்போது காரில் மேற்கத்திய இசையை அனுபவிப்போம்.

ராக் இசையில் பயிற்சி பெற்றாலும், கிடாரில் கர்நாடக இசையை வாசிக்க விரும்புகிறேன். அதற்காக 'கிடார்' குரு பிரசன்னாவிடம் பயிற்சியைப் பெற்றேன். வீணை வாசிக்கவும் விருப்பம். விரைவில் கற்றுக் கொள்வேன். வீணையில் ராக் இசை வாசிக்க முயற்சி செய்வேன் பெற்றோரின் ஊக்குவிப்பு, உந்துதல், வழிகாட்டுதல் என்னை ராக் இசையில் பிரபலப்படுத்தியுள்ளது. 2022-இல் பிரபல கிடார் கலைஞர் ஆடம் ஜோன்ஸ் எனது திறமையைப் பாராட்டி, கிடாரை பரிசளித்தார்.

'மஹிந்திரா' நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மும்பையில் ஆண்டுதோறும் நடத்தும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்'' என்கிறார் மாயா நீலகண்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT