கோப்புப் படம் Center-Center-Hyderabad
ஞாயிறு கொண்டாட்டம்

வாகன ஓட்டுநர்கள் அறிய வேண்டியவை...

எம்.ஏ. நிவேதா

மத்திய, மாநில அரசுகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், போக்குவரத்துத் துறை ஆகியன ஒன்றுசேர்ந்து வாகன ஓட்டுநர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் கடுமையான முடிவுகளை ஏப். 1 முதல் அமல்படுத்த உள்ளன.

எந்தப் பயணியும் ஆட்டோவில் செல்லும்போது போக்குவரத்துத் துறை வரையறுக்கப்பட்ட வரம்புக்கு அதிகமான மக்களுடன் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்கப்பட மாட்டாது. அதேபோல், விபத்து நடந்தால் பயணம் செய்த எல்லா பயணிகளுக்கும் அரசின் திட்டப் பயன்களைப் பெற முடியாது. விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு எந்த இழப்பீடு தொகையும் வழங்கப்பட மாட்டாது. இந்த சட்டம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கும் பொருந்தும்.

விபத்து நடைபெற்றபோது தலைகவசம் அணியாமல் இருந்தால் விபத்து இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கப்பட மாட்டாது.

ஒருவர் வாகனத்தை சாலையின் தவறான பக்கத்தில் ஓட்டி, சரியான பக்கத்தில் ஓட்டும் நபரோடு விபத்து ஏற்படுத்தினால் தவறான பக்கத்தில் ஓட்டும் நபருக்கு விபத்து இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்கப்பட மாட்டாது. அதேபோல், சரியான திசையில் ஓட்டும் வாகனத்தின் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யபட மாட்டாது.

தவறான திசையில் ஓட்டும் வாகனத்தால், சாலையை உபயோகிக்கும் மற்றவர்களுக்கு காயமோ, இறப்போ ஏற்பட்டால் தவறான வாகனத்தை ஓட்டிய நபர் ரூ.20 லட்சம் வரை இழப்பீடு தொகை அவருடைய பெயரில் உள்ள சொத்துகளின் மூலம் வழங்க வேண்டும். அப்படி இழப்பீடு வழங்கத் தவறினால் 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அவருடைய ரத்த சம்பந்த உறவினர்களின் ஓட்டுநர் உரிமமும் 7 வருடங்கள் ரத்து செய்யப்படும். வாகன ஓட்டுநர் கைப்பேசியில் பேசிக் கொண்டு விபத்து ஏற்படுத்தினால் அதே தண்டனை வழங்கப்படும்.

யாராவது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கில் இருந்து விடுபட அழுத்தம் தந்தால், 5 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

இருக்கை பெல்ட் அணியாமல் கார் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு விபத்தின்போது எந்த விதமான இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையும் அளிக்கப்படமாட்டாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

SCROLL FOR NEXT