ஞாயிறு கொண்டாட்டம்

குடும்ப உணர்வுகளைச் சொல்லும் கதை

கனவுகளை நனவாக்கும் குடும்ப பிணைப்பு

DIN

யு.கே. கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'ஃபேமிலி படம்'.

உதய் கார்த்திக், சுபிக்ஷா, விவேக் பிரசன்னா, பார்த்திபன், சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர்.ஜே. பிரியங்கா, ஜனனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிவீ இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் செல்வகுமார் திருமாறன்.

படம் குறித்து இயக்குநர் பேசும் போது....

'சென்னையில் வளர்ந்த மூன்று சகோதரர்களின் கதை. அதில் ஒருவர் தனது கனவை நோக்கி ஓடுகிறார். அவர் முயற்சி தொடர்ந்து தோல்வியில் முடிகிறது. ஒரு கட்டத்தில் குடும்பத்தினர் இணைந்து அவர் கனவை நனவாக்க, எப்படி உதவுகிறார்கள் என்பதுதான் படம். குடும்ப உணர்வுகளைச் சொல்லும் விதமான படங்கள் வந்து நீண்ட நாள்கள் ஆகி விட்டன. அந்த குறையை இது போக்கும்.

இது ஒரு ஃபீல்குட் படம். லிங்குசாமி இயக்கிய 'ஆனந்தம்' படம் நகரத்து பாணியில் இருந்தால் எப்படியிருக்குமோ அது போல குடும்ப மதிப்பையும் இந்தப் படம் பேசும். காமெடி, எமோஷன் கலந்து இருக்கும். கதைப்படி, நாயகி மதுரையைச் சேர்ந்த டீச்சர். நாயகன் சென்னையைச் சேர்ந்தவர். இருவரும் எப்படி இணைகிறார்கள் என்று இன்னொரு டிராக் இருக்கும். கதையில் ஹீரோ, வில்லன் என்று கிடையாது. பெரும்பாலும் லைவ் லொகேஷனில் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்கத் திட்டமிட்டுள்ளேன். படத்தின் முதல் பார்வை காட்சி மற்றும் டீசர் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT