மினி காற்றாலை Picasa
ஞாயிறு கொண்டாட்டம்

வீடுகளிலும் 'மினி' காற்றாலை'

வீட்டுக் கூரையில் சோலார் தகடுகள் பொருத்துவது போல, சிறிய காற்றாலைகளைப் பொறுத்த "100 கிலோ' எடையுள்ள "மினி காற்றாலையை' நெதர்லாந்து நிறுவனமான "ஆர்க்கிமிடிஸ்' கண்டுபிடித்துள்ளது.

பிஸ்மி பரிணாமன்

வீட்டுக் கூரையில் சோலார் தகடுகள் பொருத்துவது போல, சிறிய காற்றாலைகளைப் பொறுத்த "100 கிலோ' எடையுள்ள "மினி காற்றாலையை' நெதர்லாந்து நிறுவனமான "ஆர்க்கிமிடிஸ்' கண்டுபிடித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், சோலார் தகடுகளுக்கு மாற்றாக இந்த மினி காற்றாலை மாற வாய்ப்புள்ளது.

'வீட்டில் ஒரு மினி காற்றாலை, சோலார் தகடுகள் இருந்தால் வீட்டின் அனைத்து வகை மின்சாரத் தேவைகளுக்கு வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரம் போதுமானதாக இருக்கும். சத்தமில்லாத ஒருங்கிணைக்கப்பட்ட மினி காற்றாலையானது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்கிறது "ஆர்க்கிமிடிஸ்' டச்சு ஸ்டார்ட்அஃப் நிறுவனம்.

ஒன்றரை மீட்டர் நீள அகலத்தில் இருக்கும் இந்த மினி காற்றாலை வீடுகளின் கூரையில் எளிதாக பொருத்தலாம் . ஏறக்குறைய மேஜை, மின் விசிறியைவிட சற்று பெரிதாக இருக்கும் இந்த மினி காற்றாலையால், காற்று எந்தத் திசையிலிருந்து வந்தாலும் மின் சக்தியைத் தயாரிக்க முடியும். அடுத்த வீட்டுக்கு இடையூறு தரும்படியான சப்தத்தையோ இரைச்சலையோ மினி காற்றாலை உண்டாக்காது.

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக தங்களது பங்களிப்பை அளிக்க விரும்பும் பசுமை ஆர்வலர்களும், மின்வாரியத்துக்கு மாதம்தோறும் கட்டவேண்டிய மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க விரும்புபவர்களும் சோலார் பேனல்களை வீடுகளில் பொருத்துகின்றனர். இனி அவர்கள் பார்வை மினி காற்றாலையின் பக்கம் செல்லும்.

சோலார் பேனல்களுக்கு பிரகாசமான சூரிய ஒளி தேவை. மேகமூட்டம் இருந்தால் மின்சாரத் தயாரிப்பு கணிசமாகக் குறையும். இரவு நேரங்களில் சூரிய ஒளி கிடைக்காததால், சோலார் பேனல்கள் செயல்படாது... மின்சாரத்தைத் தயாரிக்காது. ஆனால் மினி காற்றாலையால் இரவு பகல் எந்த நேரத்திலும் காற்றின் உதவியால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மினி காற்றாலை ஆண்டுக்கு 300 முதல் 2500 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலுவடைந்த புயல் சின்னம்! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

சீனாவில் புதின், கிம் ஜாக் உன்! அமெரிக்காவுக்கு எதிரான சதி என டிரம்ப் குற்றச்சாட்டு!

தொடரும் வரதட்சணை கொடுமை: பெங்களூரில் ஒரே வாரத்தில் 2வது தற்கொலை!

உண்மை ஒன்றுதான்

தமிழ்நாட்டுத் தேர்தல்கள்

SCROLL FOR NEXT