முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நந்தன் படத்துக்கு ரஜினி பாராட்டு

சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கியுள்ள படம் "நந்தன்'. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Updated On : 3 நவம்பர், 2024 at 9:48 PM
நந்தன்
பகிர்:
Updated On : 3 நவம்பர், 2024 at 9:47 PM

சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கியுள்ள படம் "நந்தன்'. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்... "ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் எடுத்துரைத்திருக்கிறார்' என பாராட்டினர்.

"நந்தன்' படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்ட பல முன்னணி பிரமுகர்களும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்திருக்கிறார்.

Updated On : 3 நவம்பர், 2024 at 9:47 PM

ரஜினிகாந்த் இந்தப் படத்தை பார்வையிட்டவுடன் நடிகர் சசிகுமார் - இயக்குநர் இரா . சரவணன் - விநியோகஸ்தர் ட்ரைடன்ட் ரவி ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, "நந்தன் மிகத் தரமான.. தைரியமான... படம்' என மனம் திறந்து பாராட்டினார்.

Advertisement

இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். "நந்தன்' திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு திரைப்படம் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றாலோ அல்லது அத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலோ அத்திரைப்படத்தைப் பார்த்து படக்குழுவை ரஜினிகாந்த் பாராட்டிவிடுவார். அப்படி பல இயக்குநர்களையும், நடிகர்களையும் அழைத்துப் பாராட்டி ஊக்கம் கொடுத்திருக்கிறார்.

சொல்லப்போனால், ரஜினியிடமிருந்து பாராட்டு கிடைக்க வேண்டும் எனப் பல இயக்குநர்களும் திரைப்பட ரிலீஸூக்குப் பிறகு காத்திருப்பார்களாம். தற்போது "நந்தன்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சசிகுமாரையும் இயக்குநர் இரா. சரவணனையும் பாராட்டியிருக்கிறார் ரஜினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.