முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருக்கா?

'இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தால், உள்ளூர் தபால் நிலையங்களிலேயே எளிதில் மாற்றலாம் என்கிறார் 'பேங்க் பஜார்.காம்' நிறுவனத்தின் முதன்மை அலுவலர் ஆதில் செட்டி.

Updated On : 17 நவம்பர், 2024 at 12:00 AM
2 ஆயிரம் ரூபாய் நோட்டு
பகிர்:

'இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தால், உள்ளூர் தபால் நிலையங்களிலேயே எளிதில் மாற்றலாம் என்கிறார் 'பேங்க் பஜார்.காம்' நிறுவனத்தின் முதன்மை அலுவலர் ஆதில் செட்டி.

அவர் கூறியது:

'500, 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என 2016 நவம்பரில் மத்திய அரசு அறிவித்து, இரண்டாயிரம் ரூபாய் நோட்டைஅறிமுகப்படுத்தியது. பணப் புழக்கம் இயல்புநிலைக்குத் திரும்பியதால், 2018-இல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது.

Advertisement

2023 மே மாதத்தில் அந்த நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து படிப்படியாகக் குறைத்து, 2018-இல் அச்சிடுவதை நிறுத்தியது. திரும்பவும் பெற்றது. அவற்றை மாற்ற அல்லது முதலீடு செய்ய மக்களை ஊக்குவித்தது. அச்சடிக்கப்பட்ட நோட்டுகளில் 98 சதவீதம் திரும்பிவிட்டது.

2023-இல் புழக்கத்தில் இருந்த நிலுவைத் தொகையானது ரூ.3.56 லட்சம் கோடியிலிருந்து ரூ.6, 970 கோடியாகக் குறைந்துவிட்டது. மீதமுள்ளதையும் திரும்பப் பெறும் வகையில், 2023 அக்டோபர் 9=ஆம் தேதியிலிருந்து புதிய திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ரிசர்வ் வங்கியை நேரடியாக அணுக முடியாதவர்களுக்காக, ரூபாய் நோட்டுகளை தபால் அலுவலகத்தில் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்ள இயலும். அதற்கான வழிமுறைகள் என்ன தெரியுமா?

ரிசர்வ் வங்கியின்இணையதளத்தில் இருந்து ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான படிவத்தைக் கண்டுபிடித்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதனை நிரப்பித் தேவையானஆவணங்களை இணைக்கவும். அதிகாரபூர்வமாகச் செல்லத்தக்க நகல்களான (ஆதார்அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர்அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வங்கிக் கணக்கு விவரம்) சமர்ப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்களுடன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளுடன் தபால் நிலையம் செல்லவும்.

ரிசர்வ் வங்கி தன்னுடைய 19 கிளைகளை இந்தப் பணமாற்றத்துக்காக ஒதுக்கியுள்ளது. இந்த விவரம் தபால் நிலையங்களுக்குத் தெரியும். ஆக, அதில் ஒன்றை அவர்களே தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தைச் சோதித்து ரிசர்வ் வங்கிக் கிளை ஒன்றுக்கு அனுப்பி வைப்பர்.

குறிப்பிட்ட ரிசர்வ் வங்கிக் கிளையின் அலுவலர்கள் பரிசோதித்து, எல்லாம் சரியாக இருந்தால் பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைப்பர்'' என்கிறார் ஆதில் செட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.