ஆலிஸ் ஓக்லெட்ரீ Picasa
ஞாயிறு கொண்டாட்டம்

தாய்ப்பால் தானத்தில் கின்னஸ் சாதனை..

அமெரிக்காவில் டெக்சாஸைச் சேர்ந்த முப்பத்து ஆறு வயதான ஆலிஸ் ஓக்லெட்ரீ, 2645.58 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

சக்ரவர்த்தி

அமெரிக்காவில் டெக்சாஸைச் சேர்ந்த முப்பத்து ஆறு வயதான ஆலிஸ் ஓக்லெட்ரீ, 2645.58 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். 2014-இல் 1,569.79 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து அவர் நிகழ்த்திய கின்னஸ் சாதனையை 2024-இல் அவரே முறியடித்துள்ளார்.

தாய்ப்பால் தேவைப்படும் எண்ணற்ற மழலைகளைக் கருத்தில் கொண்டு, தனது முதல் மகன் கைல் 2010-இல் பிறந்ததும் தாய்ப்பாலை தானம் செய்யத் தொடங்கினார் ஆலிஸ்.

இதுகுறித்து அவர் கூறியது:

'எனக்கு தாய்ப் பால் அதிகமாகச் சுரந்ததால், பாலை எடுத்து வெளியே கொட்டினேன்.

பல ஆயிரம் குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காமல் புட்டிப்பாலைக் குடிக்கின்றனர் என்பதும் பெரும்பாலான பெண்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் தருவதற்கான பால் சுரப்பதில்லை என்பதும் அப்போது எனக்குத் தெரியாது. இதையறிந்த நர்ஸ், 'தாய்ப்பாலை தானம் செய்கிறீர்களா?' என்று கேட்க நான் சம்மதித்தேன்.

அடுத்து இரண்டு மகன்கள் பிறக்க, தாய்ப்பால் தானம் தொடர்ந்தது. மூன்று குழந்தைகளுக்குப் பிறகு வாடகை தாயாகவும் இருந்து குழந்தைகளைப் பெற்றுகொடுத்தேன். அப்போதும் தாய்ப்பால் தானம் தொடர்ந்தது.

'நான் நிறைய தண்ணீர் குடித்தேன். சத்தான உணவுகளைச் சாப்பிட்டேன். சரியான இடைவெளிகளில் பாலை உறிஞ்சும் கருவியால் உறிஞ்சி எடுத்து சேமித்தேன். எனது பால் எத்தனை மழலைகளுக்கு உணவாகிறது என்ற சந்தோஷத்தில் பால் அதிகம் சுரந்தது. எனது பால் இதுவரை மூன்றரை லட்சம் மழலைகளுக்கு உணவாகச் சென்றடைந்துள்ளது. இது நான் பெருமை கொள்ளும் விஷயமாக அமைந்தது மட்டுமல்லாமல் கின்னஸ் சாதனையாளராகவும் உயர்த்தியுள்ளது.

என்னிடம் அதிகப்படியான பணம் இல்லை. எனக்கு குடும்பம் இருப்பதால் பலருக்குப் பணம் கொடுத்து உதவ முடியாது. ஆனால் என்னிடம் தாய்ப்பால் அதிகமாக இருக்கிறது. அதை நான் தாராளமாகத் தானம் செய்யமுடியும். அதைத்தான் செய்துவருகிறேன். என் சமூகத்துக்கு என்னால் முடிந்ததை வழங்கி வருகிறேன்'' என்கிறார் ஆலிஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT