ஞாயிறு கொண்டாட்டம்

புதுவகை ஆல்பத்துக்கு வரவேற்பு

தமிழ் இசைத் துறையில் சமீப காலங்களில் இன்டீ பாடல்கள் என்ற புதுவகை ஆல்பங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன.

DIN

தமிழ் இசைத் துறையில் சமீப காலங்களில் இன்டீ பாடல்கள் என்ற புதுவகை ஆல்பங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. சொல்லப் போனால், இன்டீ பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்றும் கூறலாம். இந்தப் பட்டியலில் புது

வரவு இன்டீ பாடலாக இணைந்துள்ளது தான், 'திமிருக்காரியே.' கோயில் திருவிழா பின்னணியில் இந்தப் பாடல் உருவாகி இருக்கிறது. முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் பாடலை சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டார். ஏ.கே. சசிதரன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை அந்தோனிதாசன் பாடியுள்ளார். பிரபல யூடியூபர்களான டிரெண்டிங் தீவிரவாதி கெளதம் மற்றும் பிரிகிடா சாகா இணைந்து நடித்துள்ள இந்தப் பாடலை ருத்ரா ஜித் இயக்கியுள்ளார்.

ஏற்கெனவே இந்தப் பாடலின் அறிவிப்பு மற்றும் டீசர், இதற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. இதோடு அந்தோனிதாசனின் குரல் மற்றும் ஏ.கே. சசிதரனின் இசை இந்தப் பாடல் அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. ஸ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில் டிரெண்டிங் தீவிரவாதி கெளதம் மற்றும் பிரிகிடா சாகாவின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வேலை செய்துள்ளது.

இதுதவிர ஸ்ரீதர் மாஸ்டரின் அசத்தல் நடன அசைவுகள் பாடலுக்கு கூடுதல் உற்சாகம் மற்றும் உத்வேகத்தை சேர்த்துள்ளது. முன்னணி இசை தளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடல் விடியோவுக்கு மல்லிகா அர்ஜூன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஆதித் மாறன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்தப் பாடலை டிரெண்டிங் தீவிரவாதி கெளதம் புரொடெக்ஷன்ஸ் தயாரிக்க செந்தில்குமார் சரிதா சார்பில் எஸ்.எஸ். அன்ட் கோ இணைந்து தயாரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT