முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஜெயம் ரவியின் 34-ஆவது படம்!

'அகிலன்', 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்துடன் இணைகிறார் ஜெயம் ரவி.

Updated On : 13 அக்டோபர், 2024 at 11:37 AM
ஜெயம் ரவி
பகிர்:

'அகிலன்', 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்துடன் இணைகிறார் ஜெயம் ரவி.

'இருட்டு', 'தாராள பிரபு', 'எம்ஜிஆர் மகன்', 'இடியட்', 'சாணி காயிதம்', 'அகிலன்' உள்ளிட்டத் வெற்றிப் படங்களையும் 'மத்தகம்' இணையத் தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம், இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 'பிரதர்' திரைப்படத்தை பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்துள்ளது.

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரதர்' திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது.

ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகவுள்ள ஜெயம் ரவியின் 34-ஆவது படமாக இது உருவாகவுள்ளது.

'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். 'பிரதர்' திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்தப் படத்துக்காகவும் ஜெயம் ரவியுடன் இணைகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இதில் நடிக்க உள்ள முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் விரைவில் அறிவிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.