முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

உறவின் மகத்துவம்

எம். கே . ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'அறுவடை'.

Updated On : 2 பிப்ரவரி 2026, 11:05 pm IST
பகிர்:

எம். கே . ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'அறுவடை'. எம். கார்த்திகேசன் இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார். சிம்ரன் ராஜ், பருத்திவீரன் சரவணன், ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படம் குறித்து இயக்குநர் பேசும் போது, ''ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடக்கும் ஒரு சிறிய பிரச்னை, மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்து, சமூகத்தை எப்படிச் சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்துக்கு 'அறுவடை' எனப் பெயரிட்டிருக்கிறோம். கிராம கலாசாரத்தை உணர்த்தும் வகையில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும்போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன.

Advertisement

Advertisement

இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டுவிட்டுப் போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை.'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.