சோஷியல் மீடியா பக்கம் வரமாட்டேன்
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் அண்மையில் 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் அண்மையில் 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸூடன் "லவ்' வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல், தமிழில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு ஃபீமேல் சென்ட்ரிக் படம், 'தீவினைப் போற்று' வெப் சீரிஸ் என அடுத்தடுத்த லைன்-அப்களை வைத்திருக்கிறார். கடந்தாண்டு அவர் சமூக வலைத்தளப் பக்கங்களிலிருந்து முழுமையாக விலகினார்.
அது குறித்து ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், 'சமூக வலைதளப் பக்கங்களில் நான் பாதுகாப்பாக உணர்ந்ததே இல்லை. பலர் என்னுடைய உடலைப் பற்றித் தேவையில்லாமல் விமர்சித்தார்கள். என் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவிட்டார்கள். உண்மையைச் சொன்னால், எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தால் கூட நான் சோஷியல் மீடியா பக்கம் இனி வரமாட்டேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.