பண்பாடு பெண்ணின் ஆடையில் இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
வைரல் ஆகும் ஐஸ்வர்யா லட்சுமி பேச்சு...
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி - 2 திரைப்படமும் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. அண்மையில், மலையாளத்தில் இவர் நடிப்பில் உருவான ஆஷா திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், அடிக்கடி தன் ஆடை குறித்து எழும் பேச்சுக்கு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியபோது, ”பண்பாடு என்பது ஒரு பெண்ணின் உடல் அமைப்பிலோ, அவரது ஆடையிலோ மட்டும் இல்லை. நாம் பிறரிடம் நடந்துகொள்ளும் விதத்தில் இருக்கிறது. ஒரு பெண் எப்போதும் தனது மார்புப் பகுதி மற்றும் ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கு எதிர்பார்க்கப்படுகிறது. நான் கலந்துகொண்ட நிகழ்விலும் கூட அங்கிருந்தவர்கள் என் முகத்தில் கவனம் செலுத்தவில்லை. அப்போது, எனது தனிப்பட்ட எல்லைகள் மீறப்பட்டதாக நான் உணர்ந்தேன். பெண்களைப் பற்றித் தவறான கருத்துகளைச் சொல்பவர்களை யாரும் பெரிதாகக் கேள்வி கேட்பதில்லை.
Advertisement
Advertisement
நேரம் செல்லச் செல்ல, அது எத்தகைய விவாதமாக உருவெடுத்தது என்பதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனக்கு எதிரான கேலிகள் தொடங்கிய முதல் 24 மணி நேரத்திற்கு நான் அதைச் சிரித்துக்கொண்டே கடந்து சென்றேன். ஆனால் நமது நாட்டின் ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) குறித்தோ அல்லது கைவிடப்படும் முதியோர்கள் குறித்தோ நாம் ஏன் விவாதிக்கக் கூடாது? எனது உடல் பற்றி ஏன் இவ்வளவு தீவிரமான விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும்?” எனக் கூறினார்.
Actress Aishwarya Lekshmi has spoken about women's freedom regarding clothing.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.