ரூ. 100 கோடி கொடுத்தாலும் இனி இதைச் செய்ய மாட்டேன்: ஐஸ்வர்யா லட்சுமி
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஏஐ போலி புகைப்படங்கள் குறித்து பேசியுள்ளார்...
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைதளங்கள் குறித்து பேசியுள்ளார்.
தமிழில் ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி - 2 திரைப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றியைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, “என்னுடைய புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்திரித்து பதிவிட்டு வந்தது எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. உலகமே என்னைக் கைவிட்டது போலவும் இருந்தது. சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறி மனிதர்களுடன் நேரில் பேசுவதுதான் நிம்மதியைக் கொடுக்கிறது. இனி ரூ. 100 கோடி கொடுத்தாலும் இன்ஸ்டாகிராம் உள்பட எந்த சமூக வலைதளங்களுக்கும் திரும்ப வர மாட்டேன். அதிலிருந்து விலகியது மன அமைதியைக் கொடுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஐஸ்வர்யா லட்சுமியின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்திரிக்கப்பட்டு எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Actress Aishwarya Lekshmi has spoken about social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.