நடிகை ஆண்ட்ரியா 
ஞாயிறு கொண்டாட்டம்

ஹேமா குழு; ஆண்ட்ரியா மௌனம்

எப்போதும் தைரியமாக கருத்துகளை வெளியிடும் நடிகை ஆண்ட்ரியா, ஹேமா குழு பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார்.

DIN

எப்போதும் தைரியமாக கருத்துகளை வெளியிடும் நடிகை ஆண்ட்ரியா, ஹேமா குழு பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார். சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான பிரேத்யக ஆடை உலகம் 'ஷீக் ரேட்ஸ்' கடை திறப்பு விழா நடைபெற்றது. நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார்.

இந்தக் கடை பெண்களுக்கான அனைத்து விதமான பிராண்டுகளின் ஆடைகளும் கிடைக்கும் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கடையைத் திறந்து வைத்து ஆண்ட்ரியா பேசும் போது... ''நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன். இதை வடிவமைத்திருப்பது ஒரு ஆண் என்பதில் மகிழ்ச்சி.

இது மாறிவரும் இந்த உலகத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்று. இது நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தேவைப்படும் ஒன்று ஆடைகள்.இது பெண்களுக்கானது மட்டுமல்ல அனைவருக்குமானது. ஆண்கள் தங்கள் உறவினர்களுக்கு, பெண் நண்பர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம்'' என்றார்.

ஆண்ட்ரியாவிடம் ஒரு நிருபர் ஹேமா குழு பற்றியும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதை பற்றி ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு 'அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்' என்று தவித்துவிட்டார். 'நோ கமென்ட்ஸ்' என்பது அவரது பதிலாக இருந்தது குறித்து நிருபர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

எப்போதும் தைரியமாக கருத்துகளை வெளியிடும் ஆண்ட்ரியா இப்படிக் கூறியது நிருபர்களுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது . இந்த கடைத் திறப்பு விழாவினை ஒட்டி ஏராளமான பிரமுகர்கள் வந்து இதன் நிறுவனர் ஹனீப்புக்கும் புதிய நிறுவனத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“Trumpன் வரிகள் சட்ட விரோதமானது!!”: அமெரிக்க நீதிமன்றம்! | செய்திகள்: சில வரிகளில் | 30.08.25

மயக்குறியே... ரெஜினா கேசண்ட்ரா!

உதய்பூரில் நிகழ்ந்த விபத்தில் பாஜக எம்எல்ஏ உள்பட இருவர் காயம்

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 24 மணி நேரத்தில் 30 பேர் பலி! வெடி வைத்து கரைகள் தகர்ப்பு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்

SCROLL FOR NEXT