முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சிக்கு புக்கு.. சிக்கு புக்கு ரயிலே...

உலகில் ரயில்களில் இன்று அதிவேகப் பயணம் சாதாரணமாகிவிட்டது. இன்று பல லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயணிக்கின்றனர்.

Updated On : 5 ஏப்ரல், 2025 at 6:34 PM
பகிர்:

உலகில் ரயில்களில் இன்று அதிவேகப் பயணம் சாதாரணமாகிவிட்டது. இன்று பல லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயணிக்கின்றனர்.

விமானப் பயணிகளைக் கவர, எப்படி விமான நிலையங்கள் பிரமிக்கத்தக்க விதத்தில் அமைக்கப்பட்டு கவருகிறதோ, இன்று அதே போல் ரயில் பயணிகளையும் கவர்ந்து இழுக்க கவர்ச்சியாய் ரயில் நிலையங்களை உருவாக்க வேண்டியுள்ளது.

இந்த வகையில் உலகின் 10 சூப்பர் ரயில் நிலையங்கள் அவற்றின் வடிவமைப்புக்காகவே போற்றப்படுகின்றன.

சாவோ பெண்டா ரயில் நிலையம், போர்டோ- போர்ச்சுகல்

20 ஆயிரம் நீலம், வெள்ளை அசுலேஜா ஓடுகளுக்குப் பெயர் பெற்றது. போர்ச்சுகலின் வரலாற்றை சிக்கலான கலைப்படைப்புகள் மூலம் காட்சிப்படுத்தியுள்ளது தனி அழகு.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் - மும்பை இந்தியா யுனெஸ்கோ பாரம்பரியத் தளம். பிரமிக்க வைக்கும் விக்டோரியா கோதிக் ரயில் நிலையம். பிரம்மாண்டமான குவிமாடங்கள், சிற்பங்கள், வண்ணம் தீட்டிய கண்ணாடி ஜன்னல்கள். இந்திய ஐரோப்பிய கட்டடக் கலையின் பிரம்மாண்ட பிரதிபலிப்பாகும்.

கிராண்ட் சென்டிரல் டெர்மினஸ்- (நியூயார்க்) வானாளவிய கூரை, பிரம்மாண்ட சரவிளக்குகள் கொண்டது. இதன் கட்டடக் கலை நேர்த்தியானது.

லீஜ்-கில்லெமின் நிலையம்- லீஜ் (பெல்ஜியம்)

சாண்டியாகோ கஸ்டிராவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஃகு, கண்ணாடி அமைப்பு, இயற்கை ஒளியால் நிரம்பி வழியும், காற்றோட்டமான இந்த ரயில் நிலையம் பயணிகளைக் கவருகிறது.

கனசாவா நிலையம்- கனசாவா (ஜப்பான்)

கம்பீரமான சுசுமி கேட், கண்ணாடி குவிமாடத்துடன் கூடிய இந்த ரயில் நிலையம் பாரம்பரிய ஜப்பான் கலாசாரம், நவீன கட்டடக் கலைக்கு பிரபலம்.

நபோலி அப்போகோலா நிலையம்- நேபிள்ஸ் (இத்தாலி)

ஜஹா வடிவமைப்பு அதிநவீன மையம். நேர்த்தியான வெள்ளை வளைவு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இத்தாலியின் ரயில் நிலையங்களில் போற்றப்படும் நிலையங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

ஹங்கர்பக் நிலையம்- இன்ஸ்ப்ரூக் (ஆஸ்திரியா)

ஜஹா ஹந்த் வடிவமைப்பில் எழுந்த கட்டடம். இயற்கை பனி போன்ற கண்ணாடி அமைப்பு, பனிமூட்டமான ஆல்ப்ஸூடன் இணைந்து அதன் ஃபனிகுலா ரயில் பாதையிலிருந்து பிரமிக்க வைக்கும் மலைக்காட்சிகளை காணலாம்.

பிளிங்டேர்ஸ் நிலையம்- மெல்பேர்ன் (ஆஸ்திரேலியா)

மஞ்சள் முகப்பு, பசுமை மாடங்களுடன் கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் நிலையம். பரபரப்பான இந்த ரயில் நிலையம்தான் மெல்பேர்ன் நகரின் அடையாளம்.

கரேடோ ஓரியன்டி -லிஸ்பன்,போர்ச்சுகல்

சாண்டியாகோகலட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. எஃகு, கண்ணாடி அமைப்பு கொண்டது. இரவில் அழகாக ஒளிரும். மயக்கும் அமைப்பை கொண்டுள்ளது.

மத்திய ரயில் நிலையம்- மாபுடோ, மொசாம்பிக்

புதினா பச்சை நிற முகப்பு,குவி மாடம் போன்ற கூரை, நேர்த்தியான வளைவுகள் கொண்ட காலனித்துவ காலரத்தினம்.இதனை நியூயார்க் கிராண்ட் சென்ட்ரலுடன் ஒப்பிடுவர்.

முழு கட்டுரையைப் படிக்க →