உறவுகளின் மேன்மை
தர்ஷன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் "நிழற்குடை'.
தர்ஷன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் "நிழற்குடை'. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே. எஸ். அதியமானிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.
தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தர்ஷன் சிவா என்ற புதுமுகம் வில்லனாக நடித்துள்ளார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது...
'பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள். ஆனால் என் படத்தில் நடித்துள்ள குழந்தைகள் இருவருமே தேவயானிக்கு ஈடு கொடுத்து இயல்பாக நடித்துள்ளார்கள். நான் முதன் முதலாக உதவி இயக்குநராக பனியாற்றிய படம் "தொட்டாசினுங்கி'. அந்த படத்தில் தான் தேவயானி கதாநாயகியாக அறிமுகமானார், பல வருடங்களுக்கு பின் நான் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது.
Advertisement
Advertisement
குடும்ப உறவுகளின் மேன்மையை இப்படத்தின் மூலம் பேச இருக்கிறேன். உறவுகளின் உணர்வுகளை துல்லியமாக கடத்தும் விதமாக இதன் திரைக்கதை இருக்கும். இதன் ஆடியோ உரிமையை மாஸ் ஆடியோ நிறுவனமும் வெளிநாட்டு உரிமையை கஃபா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளது. தமிழ்நாடு, புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளன. திரையரங்குகளில் இப்படம் மே 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது'' என்றார் சிவா ஆறுமுகம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.