ஞாயிறு கொண்டாட்டம்

திரைக் கதிர்

சமீபத்தில் "குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்களைப் படத்தின் முக்கிய பகுதிகளில் பயன்படுத்தியிருந்தனர்.

DIN

சமீபத்தில் "குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்களைப் படத்தின் முக்கிய பகுதிகளில் பயன்படுத்தியிருந்தனர். தன்னிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்தியதாகக் கூறி, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது பெரும் பேசுபொருளானது. தற்போது இந்த ராயல்டி விவகாரம் தொடர்பாகக் கங்கை அமரன் ஒரு தனியார் நிகழ்வில் பேசியிருக்கிறார். "பிறர் அனுமதி கேட்காமல் பயன்

படுத்துவதால்தான் அண்ணன் கோபப்படுகிறார். எங்களுக்குப் பணத்தாசை எல்லாம் இல்லை. எங்களிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. நாங்கள் விதிகளின்படி நடக்க வேண்டும். அது அஜித் படம் என்கிற எந்தக் காரணமும் இல்லை. திரையில் ஒலிப்பது எங்கள் பாடல். அவ்வளவுதான்' என்று பேசினார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்த நேர்காணலில் மும்பையின் கடுமையானப் போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்த அவர், "நான் பகலில் பயணம் செய்வதில்லை. நான் ஒரு இரவு நேரப் பறவை. இரவில் போக்குவரத்து நெரிசல் இருக்காது. அந்த நேரத்தில் எளிதாக எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்.

அதனால் நான் அப்போதுதான் பயணம் செய்வேன். சில நேரம் அதிகாலையிலேயே தர்காவிற்குச் சென்றுவிட்டு, வந்து தூங்கிவிடுவேன். இது என் வழக்கமாகவே உள்ளது' என்று கூறியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என ஒரே சமயத்தில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு த்ரில்லர் "லெவன்'. இப்படம் மே 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை தமிழ்நாட்டில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி என் அழகர்சாமி வெளியிடுகிறார். இப்படத்தில் டி. இமான் இசையில் நான்கு வித்தியாசமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சரிகம நிறுவனம் இசை ஆல்பத்தை ஏப்ரல் 29 அன்று வெளியிடுகிறது. கபிலனின் "விடியாம வானம் எங்கு போச்சு...' எனத் தொடங்கும் பாடலை மனோ பாடியுள்ளார். இமானின் கால் நூற்றாண்டு திரையிசை பயணத்தில் அவரது இசையில் மனோ பாடியிருப்பது இதுவே முதல் முறை. மிகவும் அருமையான ஒரு பாடலுக்காக இணைந்திருப்பது குறித்து இருவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

முன்னணி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் நடிப்பில் புதுவிதமான சைக்கலாஜிகல் த்ரில்லராக உருவாகி வருகிறது "கலியுகம்'. மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இப்படம் வரும் மே மாதம் 9- ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

கலைப்புலி தாணு படக்குழுவைச் சந்தித்து படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார். ஒரு கற்பனையான கதை எதிர்காலத்தில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர்வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ முயலும் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தை இப்படம் சொல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

SCROLL FOR NEXT