18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் 'சட்டமும் நீதியும்'. இந்தத் தொடருக்கு ரசிகர்களின் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஜீ 5 தளத்தில் வெளியான வேகத்தில் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் வெளியீட்டைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இந்தத் தொடர் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து தயாரிப்பாளர் பிரபாகரன் பேசும் போது...'இந்த வெற்றியை ஒரு குழுவின் வெற்றியாகத்தான் பார்க்கிறேன். ரசிகர்களும் ஊடகங்களும் இந்த முழு வெப் சீரிûஸ, எங்கேயோ எடுத்துச் சென்றுவிட்டார்கள்.
இப்போது தெலுங்கு, ஹிந்தியிலும் இது மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. நடிகர் சரவணன் நாங்கள் கேட்டதை விடப் பல மடங்கு செய்து தந்துவிட்டார். அவருக்கு நன்றி. மற்ற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்த வெற்றிக்கு ஆதரவாக இருந்த ஜீ 5 ஓடிடி தளத்துக்கு நன்றி. சின்னதாக ஆரம்பித்ததை மிகப்பெரிய படைப்பாக மாற்றிய அனைவருக்கும் நன்றி' என்றார்.
நடிகர் சரவணன் பேசும் போது...' 1990 களில் நான் ஹீரோவாக வந்த போது, மக்கள் தந்த ஆதரவு. இப்போது எனக்கிருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தத் தொடரின் வெற்றியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் தயாரிப்பாளர் பிரபாகரனுக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி. என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.
இப்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இது மொழி, செய்யப்பட்டு கொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பெரும் வெற்றியைத் தந்த ரசிகர்களுக்கு நன்றி' என்றார் சரவணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.