கிராண்ட் ஃபாதர்
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு பல தரப்புகளிலும் இருந்து ஏக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு பல தரப்புகளிலும் இருந்து ஏக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அவர் அடுத்து நடித்து வரும் 'கிராண்ட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம். எஸ். பாஸ்கர், ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை பிரேம் மேற்கொள்கிறார். ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ள இப்படம் காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி படமாக தயாராகி வருகிறது.
இந்தத் திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 'பார்க்கிங்' எனும் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் எம். எஸ். பாஸ்கருக்கு படக் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவரை கெளரவிக்கும் வகையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில் எம். எஸ். பாஸ்கரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.