ஞாயிறு கொண்டாட்டம்

பாலிவுட்டில் பார்வதி நாயர்

தமிழில் 'நிமிர்ந்து நில்', 'என்னை அறிந்தால், 'உத்தமவில்லன்', 'மாலை நேரத்து மயக்கம்' உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் பார்வதி நாயர்.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழில் 'நிமிர்ந்து நில்', 'என்னை அறிந்தால், 'உத்தமவில்லன்', 'மாலை நேரத்து மயக்கம்' உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் பார்வதி நாயர். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம், 'உன் பார்வையில்'.

பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபீர்லால் இயக்கியுள்ள இந்த த்ரில்லர் படத்தில், கணேஷ் வெங்கட்ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். தன் சகோதரியைக் கொன்றவரைப் பழிவாங்கும் கதையாக இது உருவாகியுள்ளது. சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் இந்தப் படம் நேரடியாக வெளியாகியுள்ள நிலையில், படத்துக்குப் பரவலான வரவேற்பு எழுந்துள்ளது.

படம் பற்றி பார்வதி நாயர் கூறும் போது, 'இதில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கிறேன். அப்படி நடிப்பது சவாலானதாகவும், அதே நேரத்தில் நெகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது.

தற்போது பாரி கே.விஜய் இயக்கத்தில் தயாராகும் 'ஆலம்பனா' என்ற படத்தில் வைபவ் ஜோடியாக நடித்து வருகிறேன். ஆக்ஷித் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். ஆனால், திருமணத்துக்குப் பின்னரும் திரைப்படங்களில் நடிப்பதை விடவில்லை. அதற்கு என் கணவர் குறுக்கே வரவில்லை. விரைவில் பாலிவுட் சினிமாவிலும் கால் பதிக்கப் போகிறேன். இதற்காக சில கதைகளைக் கேட்டு வைத்திருக்கிறேன். வெகுவிரைவில் அறிவிப்பு வெளியாகும்.

என் கலைப் பயணத்தை திருமணம் எந்த வகையிலும் தடுத்துவிடாது. எனது புதிய அத்தியாயமாக பாலிவுட் சினிமா இருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT