திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட கோபால சமுத்திரத்தைப் பூர்விகமாகக் கொண்ட 'மாயா'வின் இயற்பெயர் மகாதேவன். ஒழுங்கும், முழுமையும் கொண்ட மாயாவின் ஓவியங்களில் ஆடை, உடல்மொழி, அழகு என்று அவர் ஒவ்வொரு கோட்டுக்கும் எடுத்துகொள்ளும் கவனம் அதிகமானது.
முதலில் 'பேசும் படம்' குழுமத்தில் இருந்து வெளியான 'பிக்சர்போஸ்ட்' இதழில் ஓவியராகப் பணியாற்றினார்.
1950-இல் ஆனந்த விகடனில் அவர் பணியில் சேர்ந்து, ஓவியராகவும் வடிவமைப்பாளராகவும் 28 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது சில்பி, மாலி, கோபுலு, வாணி, சாரதி, வர்மா என வாசகர்களின் மனம் கவர்ந்த ஓவியர்கள் பலர் இருந்தனர்.
'மாயா' தனி அடையாளத்துக்காக, ஏர்பிரஷில் 'ஸ்ப்ரே' செய்து வித்தியாசமாக ஓவியங்களை வரைந்தார். சித்திரக் கதைகள், நாடகங்கள், சிறுகதைகள், தொடர்களுக்கு அவர் வரைந்த புதுமாதிரி ஓவியங்கள் வாசகர்களைக் கவர்ந்தன.
பிறகு, 'இதயம் பேசுகிறது'; இதழில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். பிறகு 'மாயா சித்ராலயா' எனும் ஓவியப் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தினார். கூடவே 'மாயா வெட்டிங் கார்ட்' என்ற பெயரில் அழைப்பிதழ் நிறுவனத்தையும் தொடங்கினார்.
ஓவியத் துறைக்குள் நுழையும் இளம் படைப்பாளர்களை மாயா பெரிதும் பாராட்டுவார்.
'என்னதான் தொழில்நுட்பங்கள் வந்தாலும், கையால் ஓர் ஓவியத்தை சிருஷ்டிக்கும்போதுதான் அதில் உணர்வு இருக்கும்'' என்பார் மாயா.
'சிவகுமார் அறக்கட்டளை' சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், மாயா கௌரவிக்கப்பட்டார். அண்மைக்காலமாக அவரை சந்தித்த ஸ்யாம், ஜெயராஜ் உள்ளிட்டோரிடம் மாயா, 'நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஓவிய்ம் மூலம் சம்பாதித்தேனா என்பது பெரிதல்ல. ஆனால், இன்றும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க ஓவியம்தான் காரணம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.