பெயர் இல்லாத ரயில் நிலையம்
ஒடிஸ்ஸா மாநிலத்துக்கு உள்பட்ட ரெய்னா, ராய் நகர் கிராமங்களுக்கு இடையே பங்குரா மாசகிராம் ரயில் பாதையில், பெயர் இல்லாத ரயில் நிலையம் அமைந்துள்ளது.
ஒடிஸ்ஸா மாநிலத்துக்கு உள்பட்ட ரெய்னா, ராய் நகர் கிராமங்களுக்கு இடையே பங்குரா மாசகிராம் ரயில் பாதையில், பெயர் இல்லாத ரயில் நிலையம் அமைந்துள்ளது.
2008-இல் தொடங்கப்பட்ட இந்த ரயில் நிலையத்துக்கு "ராய் நகர்' என ரயில்வே நிர்வாகம் பெயர் வைத்தது. "ரெய்னா பகுதியில் நடைமேடை உள்ளது. அதனால் ராய் நகர் என பெயர் கூடாது. ரெய்னா என பெயர் வைக்கப்பட வேண்டும்' என்கின்றனர் ரெய்னா கிராம மக்கள். ஆனால், ராய் நகர் பகுதி மக்களோ, "
"ரயில் நிலையம் எங்க பகுதிக்குள் இல்லை.அதனால் ராய் நகர் பெயரே வேண்டாம்'' என்கின்றனர். பெயருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது முடிவுக்கு வரும் வரை ரயில்வே நிலையத்தை இயக்காமல் இருக்க முடியுமா?
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்வே நிலைய அலுவலர் பர்த்வான் சென்று ராய் நகருக்கான டிக்கெட்டுகளை வாங்கி வந்து தருவார். ஆனால் ரயில்வே நிலையத்தின் பெயர் இருக்காது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.