குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே ரயில் மோதி ஒருவரது சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், சடலமாக மீட்கப்பட்டவா் மேல்புறம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (30) என்பது தெரியவந்தது. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம்.
இதன் காரணமாக, இவா் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், ரயில்வே போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.