திரைக் கதிர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி'யின் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான், மீண்டும் சென்னை என சீறிப்பாய்ந்து நடந்து வருகிறது.
ஞாயிறு கொண்டாட்டம்திரைக் கதிர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி'யின் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான், மீண்டும் சென்னை என சீறிப்பாய்ந்து நடந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி'யின் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான், மீண்டும் சென்னை என சீறிப்பாய்ந்து நடந்து வருகிறது.
இந்தப் படத்தில் ரஜினியுடன், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் என மல்டி ஸ்டார்கள் நடித்து வந்த நிலையில், அமீர்கானும் இணைந்திருக்கிறார். முதல் முறையாக ரஜினியுடன் இணைந்திருக்கும் லோகேஷ் கனகராஜ், படப்பிடிப்பில் ரஜினியின் பங்சுவாலிட்டியைப் பார்த்து வியந்திருக்கிறார்.
காலை 9 மணிக்கு முதல் ஷாட் வைக்கிறார்கள் என்றால், எட்டு மணிக்கெல்லாம் ஸ்பாட்டில் ரெடியாகி விடுகிறார் ரஜினி. 170 படங்களுக்கு பிறகும் கூட, சரியான நேரத்தில் படப்பிடிப்பில் ரஜினி இருப்பது லோகேஷை வியக்க வைத்து வருகிறது.
'ராயன்' படத்துக்குப் பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ்.
இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். தவிர மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், சரண்யா ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நடிகர் கார்த்தி குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், 'ரொம்ப வருஷம் ஆச்சு திருப்பதிக்கு வந்து. என் பையன் பிறந்ததற்குப் பிறகு வரணும்னு நினைச்சோம். ஆனா, வர முடியல.
அதனால இப்போ குடும்பத்தோட வந்து சாமி தரிசனம் செய்திருக்கிறோம்' என்றார். இதையடுத்து தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்துப் பேசியவர், 'வா வாத்தியார்' படம் அடுத்துத் திரைக்கு வரவிருக்கிறது. அதையடுத்து 'கைதி 2', 'சர்தார் -2' என வரிசையாக படங்கள் இருக்கு. அதற்காகப் பணிகள் நடந்து வருகிறது' என்று கூறியிருக்கிறார்.
படங்களுக்கு இசையமைப்பதற்கு இடையில் தனி ஆல்பங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரீகாந்த் தேவா. கடந்த காதலர் தின ஸ்பெஷலாக பட்டா கத்தி கண்ணாலே... என்ற தனி ஆல்பத்தை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். கவிஞர் காதல் மதி எழுதியிருக்கும் இப்பாடலில் சஞ்சய், சனம் என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
அஷ்வின் ஸ்ரீகுமார் இயக்கியுள்ள இப்பாடலை அபிலாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகர்கோயிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு எழுந்துள்ள நிலையில், இனி மூன்று மாதங்களுக்கு ஒரு தனி ஆல்பத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.