முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தேன் மழை..!

'தேன்' கேட்ட தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதத்திடம் 'தேன்' என்ற வார்த்தையில் முடியும் வகையிலேயே ஒருவர் பேசி, வியப்பில் ஆழ்த்தினார்.

Updated On : 25 ஜனவரி, 2025 at 10:22 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2025 at 10:20 PM

'தேன்' கேட்ட தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதத்திடம் 'தேன்' என்ற வார்த்தையில் முடியும் வகையிலேயே ஒருவர் பேசி, வியப்பில் ஆழ்த்தினார்.

ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியது:

'கொல்லிமலை வனப் பகுதியில் இருந்து தேன் கொண்டுவரும்படி ஒருவரிடம் சொல்லியிருந்தேன்.

Advertisement

அவன் சொன்ன தேதியில் வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால், சிறிது கோபித்தேன்.

அதற்கு அவன் கூறியது:

'நேற்றே மலைக்கு நடந்தேன்

பல இடங்களில் அலைந்தேன்

இறுதியில் பெரும் பாறைத் தேன்

கண்டு மலைத்தேன்

ஒரு கொடியைப் பிடித்தேன்

ஏறிச் சென்று சுவைத்தேன்

சட்டியில் பிழிந்தேன்

நன்றாக வடித்தேன்

அதைக் கண்டு மகிழ்ந்தேன்

அதில் சிறிது குடித்தேன்

களித்தேன்

களைத்தேன்

அயர்ந்தேன்

மறந்தேன்

இன்று காலை எழுந்தேன்

நினைத்தேன்

தேனை எடுத்தேன்

விரைந்தேன்

நடந்தேன்

வந்தேன்

சேர்ந்தேன்

இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்' என்று சொன்னான்.

இதைக் கேட்டு நானும் மகிழ்ந்தேன். அவனுக்கு உரியதையும் தந்தேன்' என்று கூறினார். இதைக் கேட்டு கூட்டத்தினர் ரசித்து மகிழ்ந்தனர்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.