சூர்யா 
ஞாயிறு கொண்டாட்டம்

திரைக் கதிர்

இயக்குநர் வி.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்துக்கு 'கருப்பு' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

இயக்குநர் வி.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்துக்கு 'கருப்பு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, யோகி பாபு, நட்டி, 'லப்பர் பந்து' சுவாஸ்விகா, 'நெடுஞ்சாலை' ஷிவதா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் என பலரும் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.

சூர்யாவை மட்டுமே முன்னிறுத்தி வெளியிடப்பட்ட டீசரில், 'ஜெய்பீம்', 'எதற்கும் துணிந்தவன்' படங்களை போல அவர் வழக்குரைஞராக நடிப்பது வெளிப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை ஆக்க்ஷன் கதையில். மேலும் சூர்யாவின் 'கஜினி' படத்தைப் போன்ற காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் இது ஒரு உற்சாகமான தருணம் என கொண்டாடி வருகிறார்கள்.

அண்மையில் வெளியான 'கீனோ' படத்திற்கு ரசிகர்களின் பரவலான வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இப்படத்துக்கு ஐஎம்டிபி எனப்படும் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உலகளவில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களை தர வாரியாக பிரித்து அதை ரசிகர்களின் பார்வை பயன்பாட்டு அடிப்படையில் தேர்வு செய்து மதிப்பெண்கள் வழங்கி அதற்கான தகுதிவாரியாக இடங்களை வரிசைப்படுத்தி கொடுப்பதே இந்த அங்கீகாரம்.

1948-இல் வெளிவந்த ஏவி . எம் நிறுவனம் தயாரித்த 'வேதாள உலகம்' முதல் 2025-இல் வெளிவந்த 'கீனோ' படம் வரை ரசிகர்களின் பார்வை பயன்பாட்டு அடிப்படையில் இப்படத்துக்கு 10-க்கு 9.2 மதிப்பெண் கிடைத்து தற்போது ஐஎம்டிபி தர வரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ளது. த்ரில்லர் மற்றும் மிஸ்ட்ரி பாணி கதைகளுக்கு இந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்கியவர் திவாகர்.

கர்ணன் படத்துக்குப் பின் தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி இணைவது குறித்த செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. இது குறித்து பேசியுள்ள மாரி செல்வராஜ், 'பைசன்' படத்திற்குப் பிறகு நான் தனுஷ் சாரை வைத்து இயக்கவிருக்கிறேன்.

'கர்ணன்' திரைப்படம் நடந்த சமயத்திலேயே நாங்கள் புதியதாக மற்றுமொரு படத்தை இயக்க முடிவு செய்துவிட்டோம். சில காரணங்களால் அது தாமதமானது. அது பெரிய திட்டமிடல். எளிமையான கதையைப் பெரிய படமாக எடுக்க வேண்டும் என ஆசைப்பட்ட படம் அது.

அது முக்கியமான திரைப்படமாக இருக்கும். அப்படத்தின் வேலைகளும் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. அது என்னுடைய மைல்கல் திரைப்படமாக இருக்கும்' எனப் பேசியுள்ளார்.

அஜித்துக்கு 'குட் பேட் அக்லி' படத்தை தந்து அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தந்தார் இயக்குநர் ஆதிக். இப்போது மீண்டும் அஜித்துடன் இணைவது குறித்து பேசியிருக்கிறார். இது குறித்துப் பேசியிருக்கும் ஆதிக், 'அஜித் சார் கூட இன்னொரு படத்தில் இணைகிறேன்.

அது 'குட் பேட் அக்லி' மாதிரி கேங்ஸ்டர் படமாக இருக்காது. வேறு கதைக்களமாகத்தான் இருக்கும். சீக்கிரம் அதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியே வரும். இந்த ஆண்டு பல பெரிய படங்கள் ஹிட் ஆயிருக்கு. அந்த வரிசைல 'குட் பேட் அக்லி'யும் இருந்தால் சந்தோஷம்தான். அதைத் தவிர்த்த நல்ல கதை இருக்க படங்களுக்கு வரவேற்பு கிடைக்குறதும் சந்தோஷமா இருக்கு' என்று பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT