ஞாயிறு கொண்டாட்டம்

மதுவுக்கு எதிரான கதை

அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பா. முருகசாமி இயக்கி வரும் படம் குயிலி.

DIN

அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பா. முருகசாமி இயக்கி வரும் படம் குயிலி. லிசி ஆண்டனி ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ''ஒரு தாயின் வைராக்கியம் மிக்கத் தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக ஒரு காட்சி, ஒரு வசனத்தைக்கூட எங்கேயோ யாருடனோ விவாதிக்கவில்லை.

எல்லாமே எங்கேயோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள், நம் உள்ளங்கை உணர்ந்த கண்ணீர், கண் கூடாகப் பார்த்த அம்சங்கள்...இது உண்மைக்கு நெருக்கமெல்லாம் இல்லை... இது உண்மையேதான். ஒரு சினிமா, இரண்டரை மணி நேரம்தான். ஆனா, ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம்.

வாழ்க்கைதான் நாம யோசிக்கவே முடியாத சினிமா என்பது டிஸிகாவின் கருத்து. இது எவ்வளவு உண்மை? நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வோர் எளிய மனிதர்களின் வாழ்க்கைதான் இது. கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தக் குயிலி.

எங்கோ கோடி பேரில் ஒருவனுக்கு நடக்கிற கதை இல்லை. இது எல்லோருக்குமானது. உங்களை விட, என்னை விட எல்லோரும் சந்திக்கப் போகிற பிரச்னை. இந்தக் கோரத்தின் பிடியில் யாரும் சிக்கிக் கொள்ளலாம்... அதற்கான விழிப்புணர்வு இது. மதுவுக்கு எதிரான ஒரு பிரசாரம்'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 10 லட்சம் டாலர் வழங்கிய சீனா!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு!

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராஜிநாமா!

அங்கம்மாள் டிரெய்லர்!

விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ஏன் பேச வேண்டும்? பேட்டிங் பயிற்சியாளர் கேள்வி!

SCROLL FOR NEXT