ஞாயிறு கொண்டாட்டம்

ஒரு நாள் இரவில்...

புதுமுக நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' குட் டே' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

DIN

புதுமுக நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' குட் டே' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் அரவிந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் காளி வெங்கட்,

'மைனா' நந்தினி, போஸ் வெங்கட், பகவதி பெருமாள், வேல. ராமமூர்த்தி, ஜீவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மதன் குண தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். காவலர்கள்- காவல் நிலையம்- காவல்துறை பின்னணியில் நகைச்சுவைப் படைப்பாகத் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நியூ மாங்க் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரித்விராஜ் ராமலிங்கம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது..'' எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது.

இப்போதுள்ள வாழ்வில் அனுதினமும் சவால்தான். எண்ணங்கள் பொருந்தி போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது மனித வாழ்வுக்கும் பொருந்தும். ஒரு எளிய மனிதனின் ஒரு நாள் இரவுதான் கதை. அதில் சுவாரஸ்யம் என்ன... அவனின் கோபம்... என்ன என்பது கதையை இன்னும் வலுவாக்கும் சக்தி'' என்றார் அரவிந்தன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே நாளில் 463 பேருக்குப் பிணை: பாட்னா உயர்நீதிமன்றம் அதிரடி!

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் ஹிமா பிந்துவின் இரு மலர்கள் தொடர்!

ஜேஇஇ முதன்மைத் தேர்வு! மாணவர்கள் என்னென்ன கொண்டு செல்ல வேண்டும்?

சுந்தர். சி இயக்கத்தில் கார்த்தி?

பிபிஎல் நாக் அவுட் ஆட்டத்தில் மழை..! போட்டி 10 ஓவர்களாக குறைப்பு!

SCROLL FOR NEXT