மோகன் பாபு 
ஞாயிறு கொண்டாட்டம்

திரைக்கதிர்

நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன 'பெத்தராயுடு' படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மோகன் பாபுவுடன் நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

DIN

நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன 'பெத்தராயுடு' படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மோகன் பாபுவுடன் நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். மேலும், மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கண்ணப்பா' படத்தையும் குடும்பத்துடன் பார்த்திருக்கிறார்.

இதனை மோகன் பாபு புகைப்படத்துடன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.மோகன் பாபு வெளியிட்டிருக்கும் பதிவில், 'பெத்தராயுடு' படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதே நாளில் என் சிறந்த நண்பர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் கண்ணப்பா திரைப்படத்தைப் பார்த்தார்.படத்தைப் பார்த்த பிறகு அவர் அளித்த அன்பு, அரவணைப்பு மற்றும் ஊக்கம் ஆகியவற்றை என் வாழ்நாளில் மறக்க முடியாதவை. நன்றி நண்பர்' என்று பதிவிட்டிருக்கிறார்

அருண் பாண்டியன்

அறிமுக இயக்குநர் உதய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அஃகேனம்' எனும் படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். ஃ என்பது ஆயுத எழுத்தின் வார்த்தை வடிவம்.

அஃகேனம் என்றால் மூன்று புள்ளி. இதைத் தவிர்த்து இதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தினை பிரதிபலிக்கிறது. அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 'ஏஸ்' திரைப்படம் வெளியாகியிருந்தது. தொடர்ந்து, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை மாத ரிலீஸூக்குத் தயாராகி வருகிறது. இதைத் தாண்டி, மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'டிரெயின்' படத்தின் பணிகளும் ஒரு புறம் நடைபெற்று வருகின்றன.

மேலும், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படம் தொடர்பான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் தன்னுடைய பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து நடிகை சார்மி கவுரும் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

சூரி

இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'பறந்து போ'. இதனிடையே இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'டாடி ரொம்ப பாவம்' பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலைப் பாராட்டி நடிகர் சூரி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அதில், 'டாடி ரொம்ப பாவம்' பாடல் நெஞ்சைத் தொடும் பாசமிகு பாடல். அப்பா- மகன் பாசத்தை அற்புதமாகப் படம் பிடிக்கும் ராமின் பார்வை எப்போதும் உண்மையும் உணர்வும் கலந்தது. உங்கள் காட்சிகள் வெறும் படம் அல்ல. நெஞ்சில் ஆழமாகப் பதிந்து, நம் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் கலை' என பதிவிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதிப்பது அறமல்ல!

மல்லகுண்டாவில் சிப்காட் அமைக்க கணக்கெடுக்கும் பணிக்கு வந்த வருவாய்த் துறையினரை கண்டித்து பொதுமக்கள் மறியல்

தேவா் ஜெயந்தி: மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்!

தமிழ்நாடுடன் ‘டிரா’ செய்தது நாகாலாந்து

தங்கம் வென்றாா் சுஜீத் கல்கல்

SCROLL FOR NEXT