ஞாயிறு கொண்டாட்டம்

தமிழில் தலைப்பு...

சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பவுலோஸ் ஜார்ஜ் தயாரித்து வரும் படம் 'அகமொழி விழிகள்'. ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர்.

DIN

சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பவுலோஸ் ஜார்ஜ் தயாரித்து வரும் படம் 'அகமொழி விழிகள்'. ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். இயக்குநர் சசீந்திரா கே. சங்கர் எழுதி இயக்குகிறார். வரும் 9 -ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் விருந்தினராக பங்கு கொண்டு தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியதாவது... ' கேரள நண்பர்கள் இந்தப்பட விழாவிற்கு அழைத்தார்கள். மலையாள பட டப்பிங் என நினைத்துத் தான் வந்தேன்.

ஆனால் மிக அழகான தமிழ்ப் படமாகச் செய்துள்ளார்கள். அவ்வளவு அழகாக எடுத்துள்ளார்கள். ட்ரெய்லர், மூன்று பாடல் எல்லாமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. குழுவினருக்கு என் வாழ்த்துகள். இந்த வருடம் வெறும் 4 படம் வெற்றி. போன வருடம் 220 படங்களில் 8 படம் தான் வெற்றி.

சின்ன படங்களில் 15 படம் வெற்றி. பெரிய ஹீரோ பின்னால் போனால் படம் ஓடாது. கதை நன்றாக இருந்தால் மட்டும் தான் ஓடும். நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, இந்த மாதிரி புது நாயகன் நாயகியைப் போட்டுப் படமெடுத்தால் படம் ஓடும். 'அகமொழி விழிகள்' என்ன அழகான டைட்டில். அஜித் எப்போதும் தமிழ் டைட்டில் வைப்பார். ஆனால் இயக்குநர் 'குட் பேட் அக்லி' என டைட்டில் வைத்து விட்டார்.

இப்போது சிவகுமார் மகன் சூர்யா ரெட்ரோ என டைட்டில் வைத்துள்ளார். தமிழ் தலைப்பில் படம் வருவது குறைந்து விட்டது. கேரள சகோதரர் தமிழில் டைட்டில் வைக்கிறார் தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை. நல்ல மனம் குளிர்ந்து மகிழ்ந்து 'அகமொழி விழிகள்' ஜெயிக்க வாழ்த்துகிறேன்'' என்றார். இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, மங்கை அரிராஜன், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT