Mangesh Warise
ஞாயிறு கொண்டாட்டம்

பெண்களுக்கு காப்பீடு தேவை...

'சேமிப்புக்கு அப்பாற்பட்ட நிதி பாதுகாப்புக்காகப் பெண்களுக்கு காப்பீடு தேவை' என்கிறார் ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அலுவலருமான காஸ்பரஸ் ஜே. எச். க்ரோம்ஹவுட்.

ஆா்.ரங்கபாஷ்யம்

'சேமிப்புக்கு அப்பாற்பட்ட நிதி பாதுகாப்புக்காகப் பெண்களுக்கு காப்பீடு தேவை'' என்கிறார் ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அலுவலருமான காஸ்பரஸ் ஜே. எச். க்ரோம்ஹவுட்.

அவர் கூறியது:

'இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணைய அறிக்கையின்படி, 35%-க்கும் குறைவான பெண்கள் பாலிசி எடுக்கின்றனர். இந்தியாவில் 2% க்கும் குறைவான பெண்களே காப்பீட்டு திட்டங்களில் சேர்ந்துள்ளனர்.

அனைத்துப் பெண்களுக்கும் நிதி சுதந்திரம் என்பது, சமூகப் பாதுகாப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது. கிராமப்புறங்களிலும், குறைந்த வருமானப் பிரிவுகளிலும் உள்ள பெண்களிடையே காப்பீடு எடுப்பது மிக குறைவு. பெண்கள் அவர்கள் பணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஆயுள் காப்பீடு திட்டம் எடுப்பது அவசியமாகும்.

பெண்களின் ஆயுள்காலம் பொதுவாக ஆண்களைவிட சில ஆண்டுகள் அதிகமாகும். இதனால், பெண் பாலிசிதாரர்களுக்கு தவணை கட்டணம் குறைவுதான்.

தங்கள் பாலிசிகளுக்கான பிரீமியம் தொகையை சரியான நேரத்தில் செலுத்திவிடுவதால், பெண்களுக்கான பாலிசிகள் அதிக நிலைத்தன்மையை கொண்டுள்ளன.

பெண்களுக்கான சிறப்பு காப்பீட்டு விகிதங்கள், மாறுப்பட்ட சிறப்புச் சேவைகளை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலீடு, சேமிப்புக்கு பல வழிவகைகள் இருந்தாலும், வரி சலுகைகளை வழங்கும் கால காப்பீடு, குடும்பத்துக்கு நிதி பாதுகாப்பை உருவாக்குகிறது. எனவே, பெண்கள் காப்பீட்டை அவசியம் எடுப்பது நல்லது'' என்கிறார் காஸ்பரஸ் ஜே. எச். க்ரோம்ஹவுட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பால் வழியும்... ஷனாயா கபூர்!

குளிர்காலக் காலை... ஊர்மிளா மடோன்கர்!

ஒரு கன்னியாஸ்திரியின் கதை! Maria படக்குழு நேர்காணல்! | Special Interview | Maria Movie

நாட்டியத் தாரகை... திரிஷா ஷெட்டி!

சொற்களால் முடியாதபோது மௌனம் பேசும்... அபர்ணா தீட்சித்!

SCROLL FOR NEXT