ஞாயிறு கொண்டாட்டம்

பெண் கல்வியின் அவசியம்

சிவன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் படம் 'பொம்மி அப்பா பேரு சிவன்'.

தினமணி செய்திச் சேவை

சிவன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் படம் 'பொம்மி அப்பா பேரு சிவன்'. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார் சிவன் சுப்ரமணி. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

படம் குறித்து இயக்குநர் பேசும் போது, 'பல வலிகள் நிறைந்த நிஜ வாழ்க்கையின் பதிவு இது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு கதை இருக்கும். அந்தக் கதையில் வரும் கற்பனை தான் ஒவ்வொரு படமாக திரைக்கு வருகிறது.

அந்த வகையில்தான் இந்தப் படமும் உருவாகி வருகிறது. எங்கோ ஒரு குடும்பத்தில் ஒரு சம்பவம் நடக்கும். அது ஒரு படமாக வரும். அது போன்றுதான் ஒரு குடும்பத்தில் நடந்த உண்மைக் கதைதான் இந்த படம்.

படத்திற்கு கதை எழுதியபோது கதாபாத்திரங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்று நிறையப் பேர் சொன்னார்கள். அதை நம்பவில்லை. நல்ல கதை, நிச்சயம் ரசிகர்களைச் சென்று சேரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிற புது முகங்களே போதும் என்று புதுமையாக இந்தப் படத்தை உருவாக்கினேன். பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பெரும் ஆளுமைகள் எல்லாம் பேசியிருக்கிறார்கள்.

அதே விஷயத்தைத்தான் இந்த எளியவனும் பேச வருகிறேன். படப்பிடிப்பு நடந்து வருகிறது. பெண் பிள்ளைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் மூலமாகச் சொல்ல வருகிறேன்'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT